»   »  இது நம்ம ஆளு: நயனுக்குப் பதில் ஆண்ட்ரியாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிம்பு... காரணம் என்ன?

இது நம்ம ஆளு: நயனுக்குப் பதில் ஆண்ட்ரியாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிம்பு... காரணம் என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இது நம்ம ஆளு படத்தின் இசை மற்றும் பாடல்கள் நாளை வெளியாகப் போவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். எனினும் படத்தின் நாயகன் சிம்பு இதுவரை கடும் வருத்தத்தில் தான் இருக்கிறாராம்.

சிம்புவின் இந்த வருத்தத்திற்கு படத்தின் நாயகி நயன்தாரா தான் காரணம் என்று நம்பத் தகுந்த வகையில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


ஒருவழியாக படம் முடிந்து வெளியாகும் நேரத்திலும் கூட இவர்களின் பிரச்சினை தீரவில்லையே என்று கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக தற்போது பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.


இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

சிம்பு, நயன்தாரா, சூரி, ஆண்ட்ரியா மற்றும் ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இது நம்ம ஆளு. பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் மற்றும் பசங்க புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.பல்வேறு தடைகளைத் தாண்டி நாளை சிம்புவின் பிறந்த நாளில் இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் பாடல்களை படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.


மார்ச்சில்

மார்ச்சில்

படத்தை வாங்கிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வருகின்ற மார்ச் 24 ம் தேதி இப்படத்தை வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். இதனால் நீண்ட நாட்களாக இப்படத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.


மீண்டும் பிரச்சினை

மீண்டும் பிரச்சினை

இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தி வரும் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் படத்தில் 2 வது நாயகியாக நடித்திருக்கும் ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டரை வெளியிட்டு வருகின்றனர். நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் மார்க்கெட் சற்றும் இல்லாத ஆண்ட்ரியாவை விளம்பரங்களில் பயன்படுத்துவது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.


காரணம் என்ன

காரணம் என்ன

இந்தப் படத்தில் 2 பாடல்களை படம்பிடிக்க சிம்பு சார்பில் முடிவு செய்து அதற்காக நயனிடம் அணுகியிருக்கின்றனர். ஆனால் அவர் கொடுத்த தேதிகளில் இவர்கள் படப்பிடிப்பை நடத்தாமல் தொடர்ந்து இழுத்தடித்ததால் அவர் வேறு படங்களில் பிஸியாகி விட்டார். அவர் பாடல்களில் நடித்துக் கொடுக்கவில்லை என்பதால் தான் இந்த மாதிரி விளம்பரங்களில் அவரை புறக்கணிப்பதாக கூறுகின்றனர்.


பாண்டிராஜ்

பாண்டிராஜ்

இந்த விவகாரத்தில் நயன்தாரா மீது எந்தத் தவறும் இல்லை என்று படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். இந்நிலையில் ட்விட்டரில் பரபரப்பாக இருக்கும் பாண்டிராஜ் இதுவரை படத்தின் ஆடியோ, விளம்பரம் தொடர்பான எதையும் பதிவிடாமலே இருக்கிறார்.இதனால் பாண்டிராஜ்க்கு தெரியாமலே சிம்பு தரப்பில் இதை செய்கிறார்களா? என்பது தெரியவில்லை.


சிம்புவின் வருத்தம்

சிம்புவின் வருத்தம்

படத்தின் புரமோஷன்களில் நயன்தாரா கலந்து கொள்வார் என்று பாண்டிராஜ் நம்பிக்கை தெரிவித்தாலும் நயன்தாரா தரப்பில் இருந்து கலந்து கொள்வதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இதுதான் சிம்புவின் கடும் வருத்தத்திற்கு காரணமாக இருக்கிறது.


இருமுகன்

இருமுகன்

தற்போது விக்ரமுடன் நடித்து வரும் இருமுகன் படப்பிடிப்பிற்காக நயன்தாரா மலேசியா சென்றிருக்கிறார். இதனால் நாளை நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது.இதனால் நாயகன் சிம்புவின் பிறந்த நாள் தினத்தில் பாடல்கள் வெளியானாலும் கூட சிம்புவிற்கு இந்த விழா மகிழ்ச்சியை அளிக்கவில்லை என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.


English summary
Idhu Namma Aalu: Is Simbu Sad with Nayanthara?.Sources Said Simbu of Regret now, the film's heroine Nayanthara is the Main Reason.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil