இது நம்ம ஆளு படம் அவ்ளோ தானா?: சிம்பு விளக்கம்
சென்னை: இது நம்ம ஆளு படம் ஒன்றும் பாதியில் நிற்கவில்லை என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு தனது முன்னாள் காதலியான நயன்தாராவுடன் பல ஆண்டுகள் கழித்து ஜோடி சேர்ந்துள்ள படம் இது நம்ம ஆளு. சிம்புவும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்திருப்பதாலேயே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் திடீர் என்று நின்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின.

செய்தி
இன்று சிம்பு, நயன் நடித்த அந்த காட்சியை படமாக்கினார்கள், இந்த காட்சியை படமாக்கினார்கள் என்று அவ்வப்போது வெளியான செய்திகள் சுத்தமாக அடங்கிவிட்டன.

என்னாச்சு?
திடீர் என்று இது நம்ம ஆளு படம் பற்றி ஒரு செய்தியும் இல்லை. படம் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. சிம்புவும், நயன்தாராவும் தாங்கள் நடிக்கும் பிற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள் என்று கூறப்பட்டது.

சிம்பு
இது நம்ம ஆளு படத்தை நான் தயாரிக்கிறேன். அப்படி இருக்கையில் படம் நின்றுவிட்டால் எனக்கு தான் பாதிப்பு அதிகம் என்று கூறியுள்ளார் சிம்பு.

ஹேர்ஸ்டைல்
படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக 20 நாட்கள் விடுமுறையில் புதிய ஹேர்ஸ்டைல் வைத்துள்ளேன். அது தான் இந்த இடைவேளை என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு
சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைக்கும் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது.

ஹன்சிகா
படத்தில் சிம்புவின் முன்னாள் காதலி கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் நிச்சயம் நடிக்க மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











