பரம எதிரிகளும் நண்பர்களாக முடியுமானால் அது நானும், தனுஷும் தான்: சிம்பு

By Siva

சென்னை: எதிரிகளாக இருந்தவர்கள் சிறந்த நண்பர்களாக முடியும் என்றால் அது நாங்கள் தான் என்று சிம்பு நண்பன் தனுஷ் பற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் சிம்புவுக்கும், தனுஷுக்கும் ஆகவே ஆகாது. இருவரும் எலியும் பூனையுமாக இருந்தனர். அதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தால் கூட அது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தான் அவர்களின் விரோத மனப்பான்மை மாறியது.

நட்பு

நட்பு

சிம்புவும், தனுஷும் தங்களின் பகைமையை மெல்ல மெல்ல மறந்து நட்பு பாராட்ட ஆரம்பித்தனர். இதையடுத்து பொது நிகழ்ச்சிகளில் ஒருவரை ஒருவர் பார்த்தால் முகத்தை திருப்பிக் கொண்டு செல்லாமல் இருந்தனர்.

போட்டோ

போட்டோ

சிம்புவும், தனுஷும் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் அளவுக்கு அவர்களின் நட்பு வளர்ந்தது. ஒன்றாக மேடையில் தோன்ற ஆரம்பித்தனர், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர், பார்ட்டிகளுக்கு சென்றனர்.

காக்கா முட்டை

காக்கா முட்டை

தனுஷ்-வெற்றிமாறன் தயாரித்த காக்கா முட்டை படத்தில் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்தார். சிம்பு, தனுஷ் நட்பு பாராட்டுவதைப் பார்த்து அவர்களின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ட்விட்டரில்

ட்விட்டரில்

அண்மை காலமாக சிம்புவும், தனுஷும் ட்விட்டரில் தங்களின் நட்பை வளர்த்து வருகின்றனர். சிம்புவின் 30வது பிறந்தநாளுக்கு தனுஷ் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

தனுஷ்

தனுஷ்

சிம்புவும், தனுஷும் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளனர். இதை தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டு எப்பொழுதும் ஒருவருக்காக ஒருவர் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

சிம்பு

சிம்பு

சிம்பு தனுஷ் வெளியிட்ட அதே போட்டோவை ட்விட்டரில் போட்டு பரம எதிரிகளும் சிறந்த நண்பர்களாக முடியும் என்றால் அது நாங்கள் தான் என்று கூறியுள்ளார்.

நல்லது

நல்லது

ஒரே துறையில் உள்ளவர்கள் மோதிக் கொள்ளாமல் நட்பு பாராட்டுவது ஆராக்யமான விஷயம் ஆகும். இது சிம்பு, தனுஷுக்கு புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X