நடிகர் ஆகாமல் இருந்திருந்தால் 'ஷெஃப்'பாகி இருப்பேன்: தனுஷ்
சென்னை: நான் நடிக்க வராமல் இருந்திருந்தால் சமையல் கலைஞராகி இருப்பேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கஸ்தூரி ராஜா வீட்டில் இருந்து நடிக்க வந்தவர் தனுஷ். அவர் இன்று பெரிய ஹீரோவாகிவிட்டார். தமிழில் பெரிய ஹீரோவாக உள்ளவர்களால் கூட பாலிவுட்டில் பெயர் எடுக்க முடியவில்லை. அப்படி இருக்கையில் அவர் தனது முதல் இந்தி படத்திலேயே பாலிவுட்டை தன்னைப் பற்றி பேச வைத்துவிட்டார்.
அவரது இந்தி படமான ராஞ்ஹனாவின் தமிழ் டப்பிங்கான அம்பிகாபதியும் தமிழ் ரசிகர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நடிகர் ஆகாவிட்டால் என்னவாகி ஆகியிருப்பேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

நடிகராகாவிட்டால்
நான் நடிக்க வராவிட்டால் இந்நேரம் 5 நட்சத்திர ஹோட்டலில் ஷெஃப்பாக இருந்திருப்பேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

படிக்க முடியாமல் போச்சு
நடிக்க வந்ததால் என்னால் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்போ அல்லது வேறு படிப்போ படிக்க முடியாமல் போனது என்றார் தனுஷ்.

பாலிவுட் பற்றி
பாலிவுட்டில் தென்னிந்தியாவைச் சேர்ந்த பல டெக்னிஷியன்கள், ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிகின்றனர். தமிழ், இந்தி சினிமா என்றில்லை, அது இந்திய சினிமாவாகிக் கொண்டிருக்கிறது என்று தனுஷ் கூறினார்.


Click it and Unblock the Notifications











