சினிமாவும், ரேடியோவும் இல்லாட்டி சர்க்கசில் ஜோக்கராகி இருப்பேன்: மிர்ச்சி சிவா
சென்னை: சினிமாவும், ரேடியோவும் இல்லாவிட்டால் சர்க்கசில் ஜோக்கராக இருந்திருப்பேன் என்று மிர்ச்சி சிவா தெரிவித்துள்ளார்.
ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சினிமாவில் ஹீரோவானவர் மிர்ச்சி சிவா. அவர் நடித்துள்ள தில்லு முல்லு 2 படம் நாளை ரிலீஸாகிறது. இது ரஜினிகாந்த் நடித்து ஹிட்டான தில்லு முல்லு ரீமேக் தான்.
சிவா வேகமாக இல்லாமல் நிதானமாக வளர்ந்து வருகிறார்.

வாடகை வீட்டில் தான் இருக்கிறேன்
சிவா இன்னும் வாடகை வீட்டில் தான் இருக்கிறாராம். வாடகை கொடுக்க வேண்டிய பொறுப்பும் அவருடையதாம். இனிமேல் தான் சேமிப்பு குறித்து நினைக்க வேண்டும் என்கிறார்.

ரேடியோவில் இன்னும் வேலை பார்க்கிறேன்
படங்களில் நடித்தாலும் சிவா இன்னும் ரேடியோவில் வேலை பார்க்கிறாராம். தன்னால் மக்களுடன் பேசாமல் இருக்க முடியாது என்றும், அதனால் நினைக்கும் போதெல்லாம் ரேடியோ மூலம் மக்களுடன் பேசி அவர்களை சிரிக்க வைப்பதாகவும் தெரிவித்தார்.

சர்க்கசில் ஜோக்கராக ஆகியிருப்பேன்
சினிமாவும், ரேடியோவும் இல்லை என்றால் சர்க்கசில் ஜோக்கராக ஆகி மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருத்திருப்பேன் என்று சிவா கூறினார்.


Click it and Unblock the Notifications











