கருத்து சுதந்திரம் இல்லாத இந்தியாவை இனி ஜனநாயக நாடு என அழைக்காதீர்கள்: விஜய் சேதுபதி காட்டம்

கருத்து சுதந்திரம் இல்லாவிட்டால் இனி இந்தியாவை ஜனநாயக நாடு என அழைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை: கருத்து சுதந்திரம் இல்லாவிட்டால் இனி இந்தியாவை ஜனநாயக நாடு என அழைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பாஜக வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் படத்தை மீண்டும் சென்சார் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

Vijay sethupathi

பாஜகவின் இந்த அடக்குமுறைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மெர்சல் படத்துக்கு ஆதரவாக நடிகர் விஜய் சேதுபதி டிவிட்டியுள்ளார்.

அதாவது, கருத்து சுதந்திரம் இல்லாவிட்டால் இந்தியாவை இனி ஜனநாய நாடு என்று அழைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் குரல் கொடுக்க இதுதான் நேரம் என்றும் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X