இளையராஜா போட்ட கறார் கண்டிஷன்.. தவியாய் தவிக்கும் தனுஷ்?.. என்னதான் நடக்குது?

சென்னை: தனுஷ் கைகளில் இப்போது ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இளையராஜா பயோபிக். அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்க; கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார். இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். தனுஷின் லைன் அப்பில் இந்தப் படத்தின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆனால் படத்தின் அறிவிப்பு வந்ததோடு சரி அதற்கு பிறகு எந்தவிதமான மூவ்மெண்ட்டும் படத்தில் இல்லை. இதனால் படம் என்ன ஆச்சு என்ற கேள்விகள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன், கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. அவற்றில் கேப்டன் மில்லருக்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் வெளியானது. இரண்டு படங்களில் எந்தப் படம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த கோலிவுட்டிலும் இருந்த சூழலில்; அசால்ட்டாக பந்தயம் அடித்தது அயலான். இதனால் தனுஷின் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டிலேயே இருந்தார்கள். அந்த அப்செட்டை அதிகப்படுத்தும்படிதான் அமைந்தது ராயன் படத்தின் ரிசல்ட்டும். இத்தனைக்கு அது தனுஷுக்கு 50ஆவது படமாகும்.

ilayaraaja dhanush

குபேரா க்ளிம்ப்ஸ்: இப்போது அவர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே தெலுங்கில் தனது மார்க்கெட்டை வளர்ப்பதற்காக அவர் நடித்த வாத்தி படம் வாரிவிட்டது. எனவே குபேரா படமும் அந்த லிஸ்ட்டில் சேருமா இல்லை ஹிட் லிஸ்ட்டில் இணையுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. குபேராவில் தனுஷுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. க்ளிம்ப்ஸுக்காக தனுஷ் ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

தனுஷின் லைன் அப்: இது ஒருபக்கம் இருக்க கோலிவுட்டில் இப்போது அதிக படங்களை வைத்திருப்பது தனுஷ்தான். அடுத்ததாக அவர் ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம், லப்பர் பந்து இயக்குநருடன் ஒரு படம், அமரன் இயக்குநருடன் ஒரு படம், போர்தொழில் இயக்குநருடன் ஒரு படம், இளையராஜாவின் பயோபிக், இட்லி கடை என பல படங்களை வைத்திருக்கிறார். இவற்றில் இட்லி கடை படத்தை அவரே இயக்கி நடிக்கவும் செய்கிறார். அந்தப் படத்தின் வேலைகள் மும்முரமாக போய்க்கொண்டிருக்கின்றன.

இளையராஜா பயோபிக்: தனுஷின் கைவசம் இருக்கும் படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் படங்களில் ஒன்று இளையராஜா பயோபிக். தமிழ் சினிமாவின் இசையை மாற்றி அமைத்த லெஜண்ட் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்க; கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார். சில மாதங்களுக்கு முன்புதான் படத்தின் தொடக்க விழா நடைபெற்று; ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

என்னதான் ஆச்சு?: ஆனால் அதற்கு பிறகு படத்தில் எந்தவிதமான மூவ்மெண்ட்டும் இல்லை. முதலில் படத்தை தயாரிப்பதாக இருந்த மெர்குரி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க தனுஷ் தனது இட்லி கடை பட பணிகளில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் இளையராஜா பயோபிக் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை தெரிவிப்பதற்காக அருண் மாதேஸ்வரன் மற்றும் தனுஷை தன்னுடன் ஒரு வருடம் பயணிக்கும்படி இளையராஜா கேட்டுக்கொண்டதாகவும்; அதன்படி அருண் மாதேஸ்வரன் இப்போது ராஜாவுடனேயே பயணப்படுகிறார் என்று கூறப்படுகிறது.

அதேசமயம் தனுஷ் தன்னுடைய பிற பட வேலைகளில் பிஸியாக இருப்பதால் இளையராஜா போட்ட கண்டிஷன்படி தனுஷால் நடக்க முடியவில்லை என்றும்; இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவியாய் தவித்துவருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதேசமயம் எப்படியாவது இளையராஜாவின் பயோபிக்கை சிறப்பாக எடுத்துவிட வேண்டுமென்பதில் தனுஷ் குறியாக இருக்கிறாராம். இதற்கிடையே அவர் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X