»   »  மாமு ஆமீர் பற்றி கேட்பவர்களை சப்பென்று அறைய வேண்டும்: நடிகர் இம்ரான் கான்

மாமு ஆமீர் பற்றி கேட்பவர்களை சப்பென்று அறைய வேண்டும்: நடிகர் இம்ரான் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மாமு ஆமீர் கான் பற்றி இனி யாராவது கேட்டால் அவர்களை ஓங்கி சப்பென்று அறைய வேண்டும் என பாலிவுட் நடிகர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மருமகன் நடிகர் இம்ரான் கான். இம்ரான் கானும், கங்கனா ரனாவத்தும் சேர்ந்து நடித்துள்ள கட்டி பட்டி படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

இம்ரான் கான் முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

மாமு

மாமு

யாராவது என்னிடம் உங்க மாமு ஆமீர் என்று ஆரம்பித்தாலே அவர்கள் கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் போல இருக்கும் என்று காமெடியாக தெரிவித்தார்.

ரசிகை

ரசிகை

நான் துபாய் சென்றிருந்தபோது இரவு நேரத்தில் கிளப்பிற்கு சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்தவர்கள் என்னுடன் கைகுலுக்கினார்கள். அப்போது ரசிகை ஒருவர் என் கையைப் பிடித்து என்னை இழுத்தார். பின்னர் அவர் என் கையை கடித்துவிட்டார்.

கட்டிப்பிடி

கட்டிப்பிடி

ரசிகைகள் என்னைப் பார்த்தால் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். அப்படி புகைப்படம் எடுக்கையில் குஷியில் என்னை கட்டிபிடித்துவிடுவார்கள்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ரசிகர்கள் என்னுடன் புகைப்படம் எடுக்கையில் பலரின் கை என் பின்புறத்தை தொடும். சர்ஜி, கொஞ்சம் கையை அங்கிருந்து எடுத்து மேலே வைக்கிறீர்களா என்பேன் என்றார் இம்ரான்.

English summary
Bollywood actor Imran Khan wants to slap the person who asks him about his maamu Aamir Khan.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil