Ajithkumar: விஜய் டயலாக் பேசி விஜய்யை அட்டாக் செய்யும் அஜித்.. GBU படம் முழுக்க சரவெடி தான்!
சென்னை: அஜித் குமார் நடிப்பில் வரும் 10ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை வெளியாகவுள்ள படம் குட் பேட் அக்லி. அஜித்தின் 63 வது படமான இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரபு, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தை மைத்ரீ மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில் படம் குறித்த தகவல்கள் சில வெளியாகிக் கொண்டே உள்ளது. அப்படியான நிலையில் படத்தின் இடைவெளி காட்சியில் அஜித், விஜய் டயலாக் ஒன்றைப் பேசுகிறாராம்.
படக்குழு தரப்பில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் என அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. இதில் இரண்டு பாடல்களிலும் விஜய்யை சீண்டும் பாடல் வரிகள் இடம் பெற்றிருந்தது. அதாவது, ஓ.ஜி சம்பவம் என பெயரிடப்பட்ட முதல் பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் என இருவரும் இணைந்து பாடியுள்ளார்கள். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த பாடலில், ' துப்பாக்கி பீரங்கி மொத்தமா வந்தாலும் ஒத்தாள சம்பவம்டா' என இடம் பெற்றுள்ளது. இந்த வரிகள் விஜய்யை சீண்டத்தான் வைக்கப்பட்டுள்ளது என இணையவாசிகள் தொடங்கி ரசிகர்கள் வரை பலரும் கூறிவருகிறார்கள். காரணம் துப்பாக்கி என்பது விஜய்யின் படம். இப்படியான நிலையில் இரண்டாவது பாடல் வெளியானது. அனிருத் மற்றும் பால் டப்பா இணைந்து பாடிய இந்த பாடலிலும் விஜய்யை அட்டாக் செய்த பாடல் வரிகள் இடம் பெற்றது.

அட்டாக்: அதாவது, 'துப்பாக்கி வெடுச்சு வரும் சத்தம் எனக்கு தாலாட்டு பாட்டு, கத்திய உரசும்போது வரும் சத்தம் மெலடி பீட்டு' என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது. துப்பாக்கி மற்றும் கத்தி என இரண்டுமே விஜய் படங்கள் என்பதால் விஜய்யை சீண்டுவதற்காகத்தான் இந்த பாடல் வரிகள் உள்ளன என இணையவாசிகள் கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில் படத்தில் விஜய் பேசும் டயலாக்கையும் அஜித் பேசியுள்ளார் என கூறப்படுகிறது.

விஜய் டயலாக்: அதாவது, படத்தின் இடைவெளி காட்சியில் அஜித், விஜய் டயலாக் பேசுகிறாராம். அதாவது, 'வாட் ப்ரோ.. ஐ எம் பேக்' என அஜித் பேசுகிறார் என கூறப்படுகிறது. மேலும் இந்த டயலாக்கை மிகவும் மாஸான இடைவெளி காட்சியில் அஜித் பேசுவதால் அஜித் ரசிகர்களுக்கு தரமான தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும் என ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இணையவாசிகள், ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட இரண்டு பாடல்களிலும் விஜய் அட்டாக் செய்யப்பட்டார்.

வம்பு: இப்போது அஜித் டயலாக் பேசியும் விஜய் மற்றும் விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கிறாரா? மேலும் விஜய்யை வம்புக்கு இழுக்கிறார் என்றால் அது விஜய் சினிமாவில் இருக்கும் போது இழுக்க வேண்டியதுதானே? எதற்காக விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்த பின்னர் இப்படி பஞ்ச் டயலாக் பேசி என்ன பிரயோஜனம் என கமெண்ட் அடித்து வருகிறார்கள். திரைத்துறையில் இது குறித்து தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
ஏற்கனவே குட் பேட் அக்லி படத்தின் டீசர், டிரைலர் என இவை அனைத்தும் விஜய் வசம் இருந்த, அதாவது விஜய்யின் படங்கள் வசம் இருந்த சாதனைகளைத் தகர்த்து, புது சாதனை படைத்துள்ளது. இது விஜய் ரசிகர்களே எதிர்பார்க்காத ஒன்று. அதாவது,படத்தின் டீசர் ரசிகர்களை உலக அளவில் கவர்ந்தது. டீசர் மட்டும் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, யூடியூப் தளத்தில் சாதனை படைத்தது. இதன் மூலம், 24 மணி நேரத்தில் அதிகமான பார்வைகளைக் கடந்த டீசராக இந்த டீசர் அமைந்தது.
டீசர்: இது மட்டும் இல்லாமல், டீசரை ரசிகர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்தார்கள். தியேட்டரில் ரசிகர்கள் டீசரை ஒன்ஸ்மோர் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். குறிப்பாக டீசர் ரிலீஸ் தினத்தையே, ரசிகர்கள் தியேட்டரை. போதாகுறைக்கு படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என்பதால், தியேட்டருக்கு சென்று, அவரும் ரசிகர்களுடன் டீசரைப் பார்த்துக் கொண்டாடி, டீசருக்கு எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது எனப் பார்த்தார்.
சாதனை: டிரைலரை 24 மணி நேரத்தில் மட்டும் 32 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது. இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை கடந்த டிரைலர் என்ற சாதனையைப் படைத்தது. இதற்கு முன்னர் விஜய்யின் லியோ படத்தின் டிரைலர், 24 மணி நேரத்தில் 31 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருந்தது. இதன் மூலம் அதிக பார்வையாளர்களை கடந்த டிரைலராக லியோ இருந்தது. இப்போது முதல் இடத்திற்கு அஜித்தின் குட் பேட் அக்லி படம் வந்துள்ளது. இந்நிலையில் தற்போது டீசர் மற்றும் டிரைலரில் அதிக பார்வையாளர்களை கடந்த படங்கள் என்றால் அது அஜித்தின் குட் பேட் அக்லி படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
சுந்தர் மாஸ்டர்: படம் வரும் வியாழக்கிழமை ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்தில் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றிய சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் ஃபிலிமி பீட் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷ்யங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு நடிகர் அஜித் தியேட்டருக்கு வருகிறார் எனக் கூறினார். அதன் பின்னர் தியேட்டரின் ஸ்கீரினில் வருவார் எனக் கூறினார். இது தொடர்பாக பேட்டியில் அவர் பேசும்போது, “ அஜித் சார் இதை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் எனக் கூறினார். ஆனால் நான் சொல்கிறேன். அஜித் சார் குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு தியேட்டருக்கு வருகிறார் எனக் கூறினார். இவ்வாறு கூறிய சுப்ரீம் சுந்தர், சின்னதாக ஒரு கேப் விட்டுவிட்டு, ஸ்கிரீனில் வருகிறார். அவர் ஸ்கிரீனில் வரவில்லை என்றால் நீங்கள் படம் பார்க்க முடியாது எனக் கூறினார். இவரது இந்த பேச்சு நமது ஃப்லினி பீட் குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருந்தது என பேசினார்.


Click it and Unblock the Notifications











