Actor Vijay: என்னது GOAT படத்தில் விஜய்க்கு இரண்டு ரோல் இல்லையா.. அட!
சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு, லியோ படங்கள் கடந்த ஆண்டில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றன. மிகுந்த ஆயினும் வசூலில் சிறப்பாக அமைந்தன. விஜய்க்காகவே ரசிகர்கள் ஒரு படத்தை பார்ப்பார்கள், ஹிட் செய்வார்கள் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு வெளியான லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களை சிறப்பாக உணர வைத்தது. அவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் படம் கொடுத்திருந்தது.
இருந்தபோதிலும் படத்தின் இரண்டாவது பாதியில் படம் சொதப்பியது. இதை இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் தனது பேட்டியில் ஒப்பு கொண்டிருந்தார். இந்நிலையில் இந்தக் குறைகளை தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனத்தில் கொண்டு செயல்பட உள்ளதாகவும் லோகேஷ் தெரிவித்திருந்தார். லியோ 2 படம் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. விஜய்யின் அடுத்தடுத்த கமட்மெண்ட்களை தொடர்ந்து லியோ 2 படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்துள்ள விஜய், படத்தின் அடுத்தடுத்த ஷெட்யூல்களில் சிறப்பாக நடித்து வருகிறார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, மோகன் என பிரம்மாண்டமான நட்சத்திர பட்டாளத்துடன் அவரது 68வது படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் சூழலில் அவரது கேங்கும் படத்தில் இடம்பெற்றுள்ளது. அனைவரும் இணைந்து இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்கி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வரும் சூழலில் கடந்த புத்தாண்டு தினத்தையொட்டி படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. படத்திற்கு The Greatest of all time என்று பெயரிடப்பட்டுள்ளது.
இரட்டை ரோல்கள் இல்லை: இந்தப் படத்தின் போஸ்டர்களும் கடந்த புத்தாண்டையொட்டி அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இதில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் விஜய்யை பார்க்க முடிந்தது. டைம் டிராவலை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. மகன் விஜய்யின் கேரக்டர் டீஏஜிங் மூலம் மெருகேற்றப்பட உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய்க்கு இரட்டை வேடங்கள் இல்லை என்று தற்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஒரே விஜய் ஆனால் வித்தியாசமான கெட்டப்புகளில் வித்தியாசமான டைம்லைனில் வருவார் என்றும் கூறப்படுகிறது.
டைம் டிராவல் படம்: இந்தப் படம் 100 சதவிகிதம் டைம் டிராவலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. அடுத்தடுத்த டைம்லைனில் மீனாட்சி சவுத்ரி மற்றும் சினேகா விஜய்க்கு ஜோடியாக படத்தில் நடித்து வரும் சூழலில் இவானாவும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். அவர் தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் பயணித்து வந்தாலும் இந்தப் படத்தின்மூலம் நீண்ட காலங்களுக்கு பிறகு விஜய்யுடன் அவர் மீண்டும் இணைந்துள்ளார்.
சென்னையில் சூட்டிங்: தற்போது சென்னையில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்துவருகிறது. இதையடுத்து ராஜஸ்தானில் நடக்கவுள்ள அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக இம்மாத மத்தியில் படக்குழுவினர் செல்லவுள்ளனர். அடுத்தடுத்து இலங்கை, இஸ்தான்புல் ஆகிய இடங்களில் படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தன்னுடைய படங்களில் வித்தியாசமான கதைக்களங்களை தொடர்ந்து பயன்படுத்திவரும் வெங்கட் பிரபு, இந்தப் படத்தில் விஜய்யை சிறப்பாக வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நாளுக்கு நாள் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











