அட உலகநாயகனின் விஸ்வரூபம் இதுதானா?.. ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ்?.. ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: கமல் ஹாசன் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்தியன் 2 படமானது ஜூன் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் கமல் ஹாசன் நடித்திருக்கும் இன்னொரு படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

கமல் ஹாசன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இந்திய சினிமாவில் யாராலும் மறுக்க முடியாதது. சிறு வயதிலிருந்தே சினிமாவில் இருக்கும் அவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார். சின்ன வயதிலேயே சினிமாவுக்குள் வந்ததால் என்னவோ அவருக்கு சினிமாவில் தெரியாத ஜானரே இல்லை. குழந்தை நட்சத்திரம், உதவி நடன அமைப்பாளர், நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என எந்த கிரவுண்டில் இறங்கினாலும் அதில் அசால்ட்டாக ஸ்கோரி செய்துவிடுபவர் அவர்.

Indian 2 And Kalki Movie Release in June Month Here are the details

சினிமா பல்கலைக்கழகம்: கமல் ஹாசன் தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்துபவர். ஏதேனும் ஒரு புதிய தொழில்நுட்பமோ இல்லை புதிய கருவியோ வந்தால் அதனை தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகப்படுத்துவதும் அவரே. அதனால்தான் அவரை சினிமாவில் நடமாடும் பல்கலைக்கழகம் என்கிறார்கள். மேலும் தற்கால இயக்குநர்கள், நடிகர்கள் கமல் ஹாசனின் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்.

மஞ்சும்மல் பாய்ஸ்: அதற்கு சமீபத்திய உதாரணம்தான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். அப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் பொடுவல் கமல் ஹாசனின் தீவிரமான ரசிகர். 1991ஆம் ஆண்டு குணா படம் எடுக்கப்பட்ட குகையை மையமாக வைத்து மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை உருவாக்கியிருந்தார். அந்தப் படம் கேரளாவைத் தாண்டி தமிழ்நாட்டிலும் வசூல் மழை பொழிந்தது. அதற்கு காரணம் கமல் ஹாசனும், குணாவும், அதில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலனும் பாடல்தான்.

அடுத்தடுத்த படங்கள்: கமல் ஹாசன் இப்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் தக் லைஃப், அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றில் கமிட்டாகியிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கவனம் செலுத்தும் அவர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் கல்கி படத்திலும் முக்கியமான ரோலை ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஒரே மாதத்தில் ரிலீஸ்: இந்நிலையில் கமல் ஹாசன் நடித்திருக்கும் கல்கி படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் படம் ஜூன் மாதம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ஜூன் மாதம் ரிலீஸ் ஆனால் கமல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தியன் 2 படமும் அதே மாதம் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X