இந்தியன் 2 படத்தில் கமலுக்கு பதில் சூர்யா நடிக்கிறாரா?: உண்மை இது தான்
சென்னை: இந்தியன் 2 படத்தில் கமல், சூர்யா ஆகிய இருவரில் யார் நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
உலக நாயகன் கமல் ஹாஸனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கப் போவதாக ஷங்கர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார். கமல் அரசியலுக்கு வரும் நேரத்தில் இந்தியன் 2 படம் வரவிருக்கும் செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் கமலுக்கு பதில் சூர்யா இந்தியன் 2 படத்தில் நடிக்கப் போவதாக பேச்சு கிளம்பியது. இந்தியன் 2 படத்தில் சூர்யா அல்ல கமல் ஹாஸன் தான் நடிக்கிறார் என்று சம்பந்தப்பட்டவர்கள் தற்போது உறுதி செய்துள்ளனர்.
சூர்யா நடிக்கப் போவதாக வெளியான தகவல் வெறும் வதந்தியாம். இந்தியன் 2 படத்திற்காக வெளிநாட்டு ஃபிட்னஸ் டிரெய்னரை வைத்து உடலை கும்மென்று ஆக்கிக் கொண்டிருக்கிறாராம் கமல்.
சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படம் எப்பத் தான் ரிலீஸாகுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











