இந்தியாவிலேயே அதிக சம்பளம்.. படத்துக்கு படம் 50 கோடி எகிறுது.. லியோ டு தளபதி 69 வரை விஜய் சம்பளம்!
சென்னை: நடிகர் விஜய் தளபதி 69 படத்துக்கு வாங்கப்போகும் சம்பளம் தான் தற்போது இந்தியாவிலேயே அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் டாப்பிக்காக மாறியிருக்கிறது. பாலிவுட்டில் கான் நடிகர்களே வாங்காத அளவுக்கு ஒரு படத்துக்கு அதிக சம்பளம் வாங்கப் போகிறார் விஜய் என்கின்றனர்.
ஹாலிவுட்டில் மார்வெல் படங்களில் நடிக்கும் பல நடிகர்களே இன்னமும் 200 கோடி சம்பளத்தை தொடாத நிலையில், நடிகர் விஜய் தளபதி 69 படத்துக்காக 250 கோடி சம்பளம் வாங்கப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தளபதி 69 படம் தான் விஜய்யின் கடைசி படம் என்பதால் சம்பளத்தை உச்சத்துக்கு ஏற்றினாலும் அந்த படம் வெளியாகும் போது பாக்ஸ் ஆபிஸ் பல மடங்கு இருக்கும் என்றும் விஜய் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக அந்த படத்தை பார்ப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
லியோ சம்பளம்: லோகேஷ் கனகராஜ் ’லியோ’ படத்தில் விஜய்க்கு பெரிய துப்பாக்கி எல்லாம் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக விஜய்யின் உடம்பையே ஷார்ப்பான ஆயுதமாக பயன்படுத்தி சண்டைக் காட்சிகளில் மிரட்டி இருந்தார். 130 கோடி இங்கே இருக்கும் போது பின்னாடி என்ன பிரம்மாண்டத்தை வைக்கிறது. மொத்த ஃபோகஸையும் இங்கே பண்ணுங்க என லோகேஷ் சொன்னதாக ரத்னகுமார் பேட்டி ஒன்றில் பேசிய போது விஜய்யின் சம்பளம் 130 கோடி ரூபாய் என்பது தெரிய வந்தது. லியோ படத்துக்கு ஒட்டுமொத்தமாக விஜய்க்கு 150 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. ஆனால், 130 கோடி சம்பளம் என்பது படக்குழுவினர் வாயில் இருந்தே வெளியான உறுதியான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
கோட் சம்பளம்: 130 கோடி அல்லது 150 கோடி ரூபாய் சம்பளத்தில் இருந்து அப்படியே ஒரே ஜம்ப் அடித்து ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்திற்கு அதிகபட்சமாக 200 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் நடிகர் விஜய் எனக் கூறி வருகின்றனர். வாரிசு படத்தின் வசூலை விட லியோ படத்தின் வசூல் டபுள் மடங்காக மாறிய நிலையில், விஜய்யை வைத்து படம் எடுத்தால் ஓடவில்லை என்றால் கூட 300 கோடி லாபம் வரும் என்பதால், தயாரிப்பாளர்கள் விஜய் படத்தின் கால்ஷீட் கிடைத்தால் சம்பளத்தை பல கோடிகள் உயர்த்தி தர ரெடியாக உள்ளனர்.
தளபதி 69 சம்பளம்: ஒவ்வொரு படத்துக்கும் 50 கோடி ரூபாய் சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே செல்லும் நடிகர் விஜய் அடுத்ததாக டிவிவி நிறுவனம் தயாரிப்பில் எச். வினோத் இயக்கவுள்ள தளபதி 69 படத்துக்கு 250 கோடி சம்பளம் வாங்கப் போவதாக கூறுகின்றனர். இந்தியாவிலேயே வேறு எந்த நடிகரும் வாங்காத சம்பளத்தை விஜய் வாங்குவதாக கூறுகின்றனர். 1000 கோடி வசூல் ஈட்டிய ஷாருக்கான் கூட இந்தளவுக்கு சம்பளம் வாங்கவில்லை என்கின்றனர்.
அரசியலுக்கு செலவு: இத்தனை கோடிகளையும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை பலப்படுத்துவதற்காக செலவு செய்யப் போகிறார் என்றும் கூறுகின்றனர். மக்களுக்கு சேவை செய்ய பணத்தை செலவழிக்கத் தான் பல நூறு கோடிகளை சம்பளமாக அவர் வாங்கி வருவதாக கூறுகின்றனர். தமிழில் ரஜினிகாந்த், அஜித் எல்லாம் 100 கோடி சம்பளம் தான் வாங்கி வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











