அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. விஜய்யை அட்டாக் செய்த சிவகுமார்?.. சூர்யா அப்பா ஓபனா அடிச்சிட்டாரே
சென்னை: அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய் தேர்தலில் களமிறங்கவிருக்கிறார். என்டிஏ கூட்டணிக்கு சென்றுவிடுவார் என்று பலரும் ஆரூடம் கூறிய சூழலில் அதெல்லாம் இல்லை, மதச்சார்பற்ற கொள்கையில் எப்போதுமே சமரசம் கிடையாது; நாங்கள் அந்த டீம் இந்த் டீம் இல்லை, எப்போதுமே மக்கள் டீம்தான் என்று உறுதி கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக தவெக தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்திய அளவில் ஃபேமஸான நடிகராக இருக்கிறார் விஜய். தனக்கு கிடைத்திருக்கும் பிரபல்யத்தை வைத்துக்கொண்டு அரசியலிலும் பெரிய தாக்கத்தை செலுத்தலாம் என்ற முடிவோடு அரசியலுக்கு வந்திருக்கிறார். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்திருக்கும் அவர்; அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களமிறங்குகிறார். கண்டிப்பாக வெற்றி பெற்று திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்ற இறுமாப்போடு வேலைகளை தொடங்கியிருக்கிறார்கள் தவெக தொண்டர்கள்.

விஜய்யோ வேறு மாதிரி: ஆனால் விஜய்யோ எதை பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் கேஷுவலாக இருக்கிறார். ஏற்கனவே அவர் மீது மூட்டை கணக்கில் குற்றச்சாட்டை சுமத்தி; விவாகரத்துக்காக காத்திருக்கிறார் மனைவி சங்கீதா. அது போதாது என்று நடிகை திரிஷாவுடன் திருமணம் ஒன்றுக்கு ஜோடியாக வந்திறங்கினார் விஜய். இதெல்லாம் அவருக்கு என்ன மாதிரியான பின்னடைவை ஏற்படுத்துமோ என்ற உச்சபட்ச அச்சத்தில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்களும், தொண்டர்களும்.
மும்பை பறந்த விஜய்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தவெக தலைவர் விஜய் கிராமம் கிராமமாக சென்று பிரசாரத்தை மேற்கொள்வார். அப்போது தமிழ்நாடு எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு புரட்சியை சந்திக்கும் என்றெல்லாம் தவெக ஆதவ் அர்ஜுனா மேடையில் முழங்கினார். ஆனால் விஜய்யோ தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் முடியும் சூழலிலும் எந்தவிதமான பணிகளையும் தொடங்கவில்லை என்றே தெரிகிறது. மாறாக இயக்குநர் அட்லீயின் மனைவியுடைய இரண்டாவது வளைகாப்புக்காக மும்பைக்கும் பறந்திருக்கிறார்.
எழும் விமர்சனங்கள்: விஜய் மும்பைக்கு சென்றதை வைத்தும் பலரும் விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள். ஒருசிலரோ சில நாட்களுக்கு முன்பு திரிஷா மும்பையிலிருந்து போட்ட ஃபோட்டோவையும், இவர் மும்பை சென்றதையும் இணைத்து வைத்து இஷ்டத்துக்கு கதைகளையும் எழுத தொடங்கினார்கள். அத்தனைக்கும் வழக்கம்போல் சைலெண்ட்டாகவே இருந்துகொண்டார் விஜய். இந்நிலையில் நடிகரும், நடிகர் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் பேசியிருக்கும் விஷயங்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
சிவகுமார் பேட்டி: அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த உலகத்தில் எல்லாம் பெற்றவர் என்பவர் யாருமே கிடையாது. நடிகர் நாடாளலாம் என உலகத்துக்கு நிரூபித்தவர் எம்ஜிஆர். அப்படி ஒரு நடிகர் இனிமேல் பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை. இந்த நாட்டை ஆட்சி செய்தவர் எம்ஜிஆர். ஆனால் அவருக்கு வாரிசு இல்லை. உலகத்திலேயே பெரிய நடிகர் சிவாஜி கணேசன். அவரை மாதிரியும் இன்னொருவர் பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை. அவரே அரசியலுக்கு வந்து தோற்றுப்போய்விட்டார். நீங்கள் உழைத்துக்கொண்டே இருங்கள். கடவுள் என்ன கொடுக்கிறாரோ அதை வைத்து சந்தோஷப்படுங்கள். இன்னொருவருடன் ஒப்பீடு செய்யாதீர்கள்" என்றார்.
இதை பார்த்த ரசிகர்களில் ஒருதரப்பினரோ, சிவகுமார் இதில் விஜய்யின் பெயரை சொல்லவில்லை அவ்வளவுதான். மற்றபடி எம்ஜிஆருக்கு இன்னொரு நடிகரால் நாட்டை ஆட்சி செய்யவே முடியாது என சொல்லி; விஜய்யால் முதலமைச்சராகவே முடியாது என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications















