அடடா.. தாத்தாவை போல இருக்கும் பேரன்.. இந்திரஜா சங்கர் குழந்தையின் க்யூட் போட்டோஸ்!

சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், பிரியங்கா தம்பதியின் மகளான இந்திரஜா சங்கர் விஜய் நடித்த பிகில் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து விருமன் படத்தில் அதிதி சங்கரின் தோழியாக நடித்தார். இவருக்கு கடந்த ஆண்டு முறைமாமன் கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில், இந்திரஜாவிற்கு ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது நடிகை இந்திரஜா, தனது குழந்தையின் அழகான போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

நடிகையான இந்திரஜா சங்கர், தனது அப்பா மற்றும் அம்மாவுடன் அவ்வப்போது விதவிதமான ரிலீஸ் வீடியோவை வெளியிட்டு இணையத்தில் பிரபலமானர். திடீரென இவர், தனது முறை மாமன் போட்டோவை பகிர்ந்து, இவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து இந்திரஜா மற்றும் கார்த்திக் தம்பதியருக்கு கடந்த ஆண்டு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. ஹல்தி, மெஹந்தி, சங்கீத், ரிசப்ஷன் என தடபுடலாக நடந்த இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களின் திருமணத்தை பிரபல யூடியூப் சேனல் ஒன்று வளைத்து வளைத்து வீடியோ எடுத்து வெளியிட்டு இணையத்தையே திக்குமுக்காட வைத்துவிட்டது.

robo shankar indraja baby

இந்திரஜா சங்கர்: திருமணத்திற்கு பிறகு இந்திரஜா தனது கணவர் கார்த்திக்குடன் விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இருவரும் மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நடனமாடி அசத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில் தான் இந்திரஜா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை கார்த்திக் அனைவருக்கும் அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் இந்திரஜாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

robo shankar indraja baby

நட்சத்திரன்: அதன்பின், கமல்ஹாசனின் தீவிர ரசிகரான, ரோபோ சங்கர், தனது மகள், மருமகனுடன் அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கமலஹாசன், குழந்தைக்கு நட்சத்திரன் என அழகான தமிழ் பெயர் வைத்தார். இதனை இந்திரஜா தனது இன்ஸ்டாகிராமில் போட்டோவுடன் பகிர்ந்து இருந்தார். குழந்தையின் முகத்தை அதுவரை ரசிகர்களுக்கு காட்டாமல் இருந்த இந்திரஜா, தனது குழந்தைக்கு முருகன் போல வேடமிட்டு, எங்கள் வீட்டு சின்ன முருகன் நட்சத்திரன் என பதிவிட்டு இருந்தார். இந்த போட்டோவை பார்த்த பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

robo shankar indraja baby

அப்படியே தாத்தாவை போல: ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் இந்திரஜா சங்கர், இன்ஸ்டாகிராமில், தனது குழந்தையின் இரண்டாம் மாத போட்டோஷூட் என பதிவிட்டு குழந்தை நட்சத்திரனின் அழகிய போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த பலர் லைக்குகளை குவித்து வருகின்றனர். சிலர் குழந்தை அப்படியே தாத்தா ரோபோ சங்கர் போல இருக்கிறது என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகை இந்திரஜா சங்கர், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய Kooran படத்தில் நடித்திருந்தார். இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான்,கவிதா பாரதி, இந்திரஜா ரோபோ சங்கர் என பலர் நடித்திருந்தனர். இந்த படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X