இதுக்கெல்லாம் ஒத்துக்கணும்.. சித்தார்த்துக்கு அதிதி ராவ் போட்ட கண்டிஷன்கள் இவ்வளவா..?
சென்னை: சித்தார்த்துக்கும் அதிதி ராவுக்கும் சில நாட்களூக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருக்கிறது. அதேபோல் அதிதி ராவும் ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக கூறப்பட்ட சூழலில் நிச்சயதார்த்தம் நடந்ததாக சித்தார்த் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்தச் சூழலில் சித்தார்த்துக்கு அதிதி ராவ் கண்டிஷன்கள் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவர் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஆனால் படம் எதுவும் இதுவரை இயக்கவில்லை. தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடித்திருக்கிறார் அவர்.

ஓபன் டாக்: சித்தார்த்தை பொறுத்தவரை தனக்கு மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடியவர். குறிப்பாக அரசாங்கம் ஏதேனும் தவறு செய்தால் யாருக்கும் அஞ்சாமல் ட்வீட்டும் போடுவார்.அப்படி அவர் பதிவு செய்திருந்த பல ட்வீட்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன. ஆனால் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அமைதியாக இருந்துவருகிறார் சித்தார்த்.
டக்கரும் கவிழ்ந்தது: திறமையான நடிகர் என்று பெயர் எடுத்தாலும் இதுவரை பெரிய ஹிட் எதுவும் கொடுக்காமல் இருக்கிறார் சித்தார்த். அவரது நடிப்பில் கடைசியாக டக்கர் என்ற படம் வெளியானது. கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை சித்தார்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் இந்தப் படமும் அவர் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை. இதனையடுத்து இந்தியன் 2 படமாவது தனக்கு தேவையான வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
சித்தா: சூழல் இப்படி இருக்க அவர் சித்தா என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். படத்தை அருண்குமார் இயக்கியிருந்தார். நல்ல எதிர்பார்ப்புக்கிடையே வெளியான படத்துக்கு ரசிகர்கள் தங்களது பெரும் ஆதரவை கொடுத்தனர். குறிப்பாக சித்தார்த்தின் கரியரிலேயே இந்தப் படம்தான் பெஸ்ட் படமாக அமைந்துவிட்டது எனவும் ரசிகர்கள் கூறினர். இதனால் சித்தார்த் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்.
காதல்: இதற்கிடையே சித்தார்த்துக்கும் அதிதி ராவுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் அதுகுறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக புகைப்படத்தை பகிர்ந்து உறுதி செய்திருந்தார் சித்தார்த்.
அதிதி ராவின் கண்டிஷன்கள்: இந்நிலையில் சித்தார்த்துக்கு அதிதி ராவ் சில கண்டிஷன்கள் போட்டுத்தான் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது. அதன்படி, திருமணத்துக்கு பிறகும் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை கூடாது, எந்த கிளாமர் பாத்திரங்களை தேர்வு செய்தாலும் அதனை வைத்து பிரச்னை வரக்கூடாது, படிப்பிடிப்பு எங்கு நடந்தாலும் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் போன்ற கண்டிஷன்களை அவர் போட்டதாகவும் சித்தார்த் அதற்கு ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











