ஒரே ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கிய விஜய் ஆண்டனி !
சென்னை : இசையமைப்பாளராக இருந்து இப்போது ஆக்ஷன் கதாநாயகனாக மாறியுள்ளது இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி
உலகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய நாக்க முக்கா என்ற பாடலுக்கு இசை அமைத்து இந்திய அளவில் பிரபலமான இசையமைப்பாளராக மாறினார்
இசை அமைப்பாளர் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து வரும் விஜய் ஆண்டனி ஒரே ஒரு வாய்ப்பு கிடைக்காதா என பல நாட்கள் ஏங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாக்க முக்கா
இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, அனிதா நடிப்பில் வெளியான சுக்ரன் படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இந்த படத்தில் மெலோடி,குத்து பாடல் என அனைத்தையும் கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விஜய் ஆண்டனிக்கு நாக்க முக்கா பாடல் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் உலகமெங்கிலும் பட்டி தொட்டி எங்கும் பரவி மிகப்பெரிய வைரலானது. இன்றுவரை பாலிவுட்டில் பல நிகழ்ச்சிகளில் இந்த பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றது

வித்தியாசமான வார்த்தைகளை
மற்ற இசையமைப்பாளர்களிடம் இருந்து சற்று வித்தியாசமாகவும் வித்தியாச வித்தியாசமான வார்த்தைகளை பாடல்களில் பயன்படுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ள விஜய் ஆண்டனி தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களுக்கு நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். நான் படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தனர்

மினிமம் கேரன்டி
இங்கு ஹீரோக்களுக்காக எந்த படமும் ஓடுவதில்லை கதைக்காக மட்டும் தான் ஓடுகிறது கதை நன்றாக இருந்தால் படம் ஹிட்டாகும் என்பதை நான் படத்தின் மூலம் அறிந்த விஜய் ஆண்டனி நல்ல ஹீரோவாகவும் ஆனார். நான் வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக சலீம் என்ற படத்தில் நடித்தார் இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது. விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் நல்ல கதை அம்சம் கொண்ட மினிமம் கேரன்டி கொண்ட படங்களாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் நற் பெயரும் கிடைத்தது.

மிகப்பெரிய வெற்றிப்படமாக
இடையில் ஒரு சில படங்கள் flop கொடுத்தாலும் பிச்சைக்காரன், சைத்தான், திமிரு புடிச்சவன், கொலைகாரன் என பல வெற்றிப் படங்களையும் கொடுத்துள்ளார். இதில் பிச்சைக்காரன் படம் தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது. கடைசியாக வெளியான கோடியில் ஒருவன் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்பொழுது அக்னி சிறகுகள்,காக்கி, ரத்தம்,தமிழரசன், கொலை, மழை பிடிக்காத ,மனிதன், ரதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஒரு வாய்ப்பு கிடைக்காதா
விஜய் ஆண்டனி ஆரம்ப காலகட்டத்தில் திரைத்துறையில் இசையமைப்பாளராக ஆவதற்கு முன்பு சவுண்ட் என்ஜினியராக பணியாற்றிக் கொண்டிருந்ததார். அப்போது இசையமைப்பாளராக ஆகவேண்டும் என ஒரே ஒரு வாய்ப்பு கிடைக்காதா என பல இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு ஏங்கியுள்ளதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











