உதயநிதியும் அவர் மகனுமே விஜய் ரசிகர்கள்தான்.. இங்கே பாருங்க வீடியோவை.. இன்பநிதி பின்னிருக்காரு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பதவியேற்றிருக்கிறார் சி.ஜோசப் விஜய். முதலமைச்சராக பதவியேற்ற பின் தலைமை செயலகம் சென்று தன்னுடைய பணிகளை தொடங்கிய அவர்; திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். அவருக்கு தன்னுடைய வாழ்த்தையும், ஆலோசனையையும் வழங்கினார் ஸ்டாலின். அந்த சமயத்தில் எம்.எல்.ஏவும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகளை திமுகவினரால் ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை. ஏனெனில் மக்களுக்கு நிறைய நல்ல திட்டங்களை ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார்; மக்களிடமும் திமுக ஆட்சி மீது பெரிய அதிருப்தி இல்லை; எனவே இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைப்போம் என்றுதான் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை எல்லாம் விஜய் என்ற ஒற்றை சுனாமி வாரி சுருட்டி தனக்குள் வைத்துக்கொண்டது. அவரது கட்சி மொத்தம் 108 தொகுதிகளில் வென்றது.

Internet Calls Udhayanidhi Stalin an Undercover Vijay Fan After Viral Video
Photo Credit:

முதலமைச்சராக விஜய்: தனி பெரும் கட்சியாக வந்தாலும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு பெற்றார். அந்தக் கட்சிகள் தங்களது ஆதரவையும் கொடுத்திருக்கின்றன. காங்கிரஸ் மட்டும்தான் திமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது. ஒருவழியாக நேற்று முன்தினம் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.

Also Read
கருப்பு பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா.. முதலமைச்சர் விஜய் பற்றிய பேச்சாகத்தான் இருக்குது.. இயக்குநர் புகழாரம்
கருப்பு பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா.. முதலமைச்சர் விஜய் பற்றிய பேச்சாகத்தான் இருக்குது.. இயக்குநர் புகழாரம்

பணிகளை தொடங்கிய விஜய்: பதவியேற்ற கையோடு, 'வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப் பெண் அதிரடி படை, போதை பொருள் தடுப்பு படை அலகுகள்' ஆகிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். அதனையடுத்து தலைமை செயலகம் சென்று கோப்புகளை பார்வையிட்டும், கோப்புகளில் கையெழுத்திட்டும் தனது பணிகளை தொடங்கினார். மேலும், காவல் துறை அதிகாரிகளை அழைத்து சட்டம் ஒழுங்கு, போதை பொருளுக்கு எதிராக செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எல்லாம் ஆலோசித்தார்.

நாகரீக அரசியல்: இதற்கிடையே பதவியேற்பு விழாவுக்கு எதிர்க்கட்சியினை விஜய் அழைக்காதது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவரோ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பாமக அன்புமணி உள்ளிட்டோரை சந்தித்தார். அதிலும் விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்து திமுகவையும், ஸ்டாலினையும் அட்டாக் செய்துதான் அரசியல் பேசினார், பழகினார். அப்படிப்பட்ட விஜய் நேற்று ஸ்டாலினை சந்தித்தது நாகரீக அரசியலை விஜய் தொடர்வார் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

ட்ரெண்டாகும் வீடியோ: விஜய்க்கு வாழ்த்தையும், தனது ஆலோசனையையும் வழங்கியதாக ஸ்டாலின் கூறினார். அந்த சந்திப்பின்போது எதிர்க்கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான உதயநிதியும் உடன் இருந்தார். இந்நிலையில் உதயநிதி பகிர்ந்த பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது கடந்த 2015ஆம் ஆண்டு உதயநிதியின் மகன் இன்பன் உதயநிதி; துப்பாக்கி படத்தில் விஜய் பேசிய Iam Waiting என்ற வசனத்தை டப்ஸ் மாஷ் செய்திருக்கிறார். அதை ஷேர் செய்திருக்கும் ரசிகை, 'இன்னும் அவரது (உதயநிதி) கணக்கில் அந்த ட்வீட்கள் எல்லாம் இருக்கின்றன. அதை பார்த்தாலே அவரது உள்ளுக்குள் ரகசிய விஜய் ரசிகர்கர் என்படு தெரிகிறது' என குறிப்பிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X