அழைத்தாலும் இல்லாவிட்டாலும் சல்மான் தங்கையின் திருமணத்திற்கு செல்வேன்: ஷாருக்கான்

By Siva

மும்பை: அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் நான் நிச்சயம் சல்மான் கான் தங்கை அர்பிதாவின் திருமண விழாவில் கலந்து கொள்வேன் என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதாவுக்கும், ஆயுஷ் ஷர்மாவுக்கும் வரும் 18ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள பாலக்னுமா பேலஸில் பிரமாண்டமாக திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமண விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் என்று ஏராளமானோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

Invite or not, Shah Rukh Khan to attend Arpita Khan's wedding

அர்பிதாவின் திருமணத்திற்கு சல்மான் கானின் பரம எதிரியான ஷாருக்கான் வருவாரா என்று பலரும் வியந்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷாருக்கான் கூறுகையில்,

சல்மானின் தங்கை என் தங்கை போன்றவர். அப்படி இருக்கையில் அவரது திருமணத்திற்கு எனக்கு அழைப்பு வைத்தாலும் வைக்காவிட்டாலும் நிச்சயம் செல்வேன். அர்பிதாவை எனக்கு குழந்தையில் இருந்து தெரியும். அவர் என் கையில் தவழ்ந்தவர். அவர்கள் குடும்பம் என் குடும்பம் போன்று. நான் கட்டாயம் திருமணத்தில் கலந்து கொள்வேன் என்றார்.

திருமண அழைப்பிதழ் அளித்தார்களா என்று கேட்டதற்கு சரியாக தெரியவில்லை, அது முக்கியமும் இல்லை என்றார் ஷாருக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X