வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுத்த ஐபிஎல்-க்கு நன்றி: ஷாரூக்கான்

மும்பை: ஐபிஎல்-ன் மூலம் தானும், தன் குழந்தைகளும் நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டதாக பிரபல ஹிந்தி நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள, 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்து கொண்ட போது தன்னுடைய ஐபிஎல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் ஷாரூக்

மேலும், இது குறித்து ஷாரூக்கான் கூறியதாவது...

நல்ல பாடம்...

நல்ல பாடம்...

நான் ஐபிஎல்-ன் மூலம் வாழ்க்கையில் இழந்தவன் ஆகாமல் எப்படி இழப்பது என்பதைக் கற்றுக் கொண்டேன். என் குழந்தைகளுக்கும் கூட இது ஒரு நல்ல பாடம் தான்.

சினிமா ஒரு மாயை...

சினிமா ஒரு மாயை...

என் குழந்தைகள் என் தொழில் மூலம் கற்றுக் கொண்டது குறைவு தான். காரணம் அது மாயை. ஆனால், ஐபிஎல் அப்படியல்ல...

நன்றி ஐபிஎல்...

நன்றி ஐபிஎல்...

வாழ்க்கையில் வெற்றியாளர்கள் ஆவதற்கு சந்திக்க வேண்டிய ஏற்ற, தாழ்வுகளை ஐபிஎல் அவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. எனவே, அதற்கு என் நன்றிகளைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

சூட்டிக் இருந்ததால்...

சூட்டிக் இருந்ததால்...

நான் வந்தாலும், வராவிட்டாலும் ரசிகர்கள் கிரிக்கெட் மேட்ச்சை ரசிப்பார்கள் என எனக்குத் தெரியும். என் படப்பிடிப்பு வேலைகள் நிலுவையில் இருந்ததால் பல போட்டிகளை பார்வையிட என்னால் வர இயலாது போனது உண்மைதான்.

சினிமாவும், ஐபிஎல்லும்...

சினிமாவும், ஐபிஎல்லும்...

என் படங்களைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்கிறார்கள். எனவே, நான் கிரிக்கெட் மூலமாகவும், சினிமாவின் மூலமாகவும் மகிழ்ச்சி அடைய வைக்க முயற்சி செய்கிறேன்' என்றார்.

வருத்தம் தான்....

வருத்தம் தான்....

ஆனால் எதிர்பார்த்த அளவு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடாதது ஷாரூக் கானிற்கு கொஞ்சம் வருத்தம் தானாம்.

More from Filmibeat

Read more about: shahrukh khan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X