நம்ம அலைபாயுதே மேடியா இது, நம்பவே முடியலையே...! 'இறுதிசுற்றில்' களமிறங்கும் மாதவன்
சென்னை: மணிரத்னம் கைவண்ணத்தில் உருவான காதல் காவியம், அலைபாயுதே திரைப்படத்தில் அறிமுகமாகி இளம் பெண்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் மாதவன். இதன்பிறகு கன்னத்தில் முத்தமிட்டால், மின்னலே, ரன், டும்டும்டும் போன்ற படங்களும் பெரும் வெற்றி பெற்று ரசிகர்களிடம் மாதவனை கொண்டு சேர்த்தன. பெரும்பாலான படங்கள், மாதவனை ஒரு சாக்லேட் பாய் என்ற இமேஜுக்குள்ளேயே வைத்திருந்தன.

மாதவனை எங்கே
ஆயுத எழுத்து, தம்பி போன்ற படங்களில் கொஞ்சம் ஆக்ரோஷத்தை காண்பித்து நடித்திருந்தாலும் அவை ரசிகர்களிடம் அதிலும் குறிப்பாக ரசிகைகளிடம் எடுபடவில்லை. இந்நிலையில்தான் பாலிவுட்டிலும் கால்பதித்தார் மாதவன். அதன்பிறகு தமிழில் பல காலமாக ஆளையே காணவில்லை. சில விளம்பரங்களில்தான் மாதவனை பார்க்க முடிகிறது என்பது ரசிகர்கள் அங்கலாய்ப்பு.

இதோ வந்துட்டாருல்லா..
ஆனால் அதற்கெல்லாம் சேர்த்துவைத்து பதிலடி அளிக்கும் வகையில் தனது புதிய படத்தில் களமிறங்கியுள்ளார் மாதவன். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுதா கோங்ரா என்ற பெண் இயக்குநரின் படைப்பான இறுதி சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களமிறங்குகிறார் மாதவன். இப்படம் 'சாலா கடூஸ்' என்ற பெயரில் இந்தியிலும் வெளியாக உள்ளது.

நாசர், ராதாரவி
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்காக, இப்படத்தை சி.வி.குமார் மற்றும் எஸ்.சசிகாந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். ஹீரோயின்களாக ரிதிகா சிங், மும்தாஜ் சர்க்கார் ஆகியோர் நடிக்கிறார்கள். நாசர் மற்றும் ராதாரவி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உடற்கட்டு
இந்த படத்தில் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வுபெற்று பயிற்சியாளராக செயல்படும் கதாப்பாத்திரமாக நடிக்கும் மாதவன், இதற்காக பல மாதங்கள் குத்துச்சண்டை பயிற்சியும், உடல்பயிற்சியும் எடுத்துள்ளார். இதனால் மாதவன் உடல் முறுக்கேறி சிக்ஸ்பேக் வைத்திருப்பவரை போல உள்ளது.

தாடியுடன் அதகளம்
தாடியுடன் வெளியிடப்பட்டுள்ள 'ஃபர்ஸ்ட் லுக்' மாதவனை பார்த்தால், அது மாதவன்தானா என்ற சந்தேகம் அவரது தீவிர ரசிகர்களுக்கே வந்துவிடும். 19ம்தேதி படத்தின் டீசர் வெளியாக உள்ளது. என்ன அலைபாயுதே ரசிகர்களே.. ரெடிதானா? மாதவனின் மெனக்கெடலை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications











