அஜித்துக்கு பிடிக்காத நடிகர் இவர்தான்... யாரு பா இப்படி சொன்னது
சென்னை : நடிகர் அஜித் வலிமை வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் ஹெச் வினோத் இயக்கத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது
இந்த நிலையில் அஜித்துக்கு பிடிக்காத நடிகர் யார் என்பதை நேர்காணல் ஒன்றில் வலைப்பேச்சு அந்தனன் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழில் ரீமேக்
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வசூல் சாதனைகளை செய்து வருகிறது சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என தனது ஒவ்வொரு படைப்பிலும் ரசிகர்களை மிரட்டி வந்த இயக்குனர் வினோத் மூன்றாவது படத்தில் அஜித்துடன் இணைந்தார்.
இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் தமிழில் நேர்கொண்டபார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதில் வயதான தோற்றத்தில் வக்கீலாக அஜித் நடித்து பட்டையைக் கிளப்பி இருப்பார்.
நேர்கொண்ட பார்வை பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை குறித்து மிக அழுத்தமாக பேசியதால் பெண்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது

வசூல் சாதனை
அதை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமான அஜித் இந்த முறையை முழுக்க முழுக்க ஆக்சனில் இறங்கினார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் உருவான இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வந்த கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக வலிமை எந்த ஒரு அப்டேட்டில் வெளியிடாமல் ரசிகர்களை ஏக்கத்திலேயே வைத்திருந்த படக்குழுவுக்கு பொங்கலுக்கு வலிமை ரிலீஸாகும் என அறிவித்திருந்தது பின் அந்த தேதியும் தள்ளி போக இறுதியாக பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகி இன்று வரை வசூல் சாதனை புரிந்து வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில்
பொதுவாக அஜித்திற்கு ஒரு இயக்குனரை பிடித்து விட்டால் அவருடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற அந்த வகையில் வினோத்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை,வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித் அடுத்த படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது ஆனால் அதில் டிவிஸ்ட்டாக அடுத்ததாக இயக்குனர் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது

அண்ணன் நடிகரை பிடிக்காது
இவ்வாறு தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித்திற்கு பிடிக்காத நடிகர் யார் என்பது குறித்து பிரபல எழுத்தாளரும் விமர்சகருமான வலைப்பேச்சு அந்தனன் கூறியுள்ளார். அண்ணன் தம்பிகளாக தமிழில் வெற்றிகரமாக உள்ள முன்னணி நடிகர்களில் அண்ணன் நடிகரை தான் அஜித்திற்கு பிடிக்கவே பிடிக்காதாம். அதற்கு என்ன காரணம் என்பது குறித்து கூற மறுத்துவிட்டார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அண்ணன் தம்பி நடிகர்கள் என்றால் சூர்யா கார்த்தி தான் பிரபலமான முன்னணி நடிகர்களாக உள்ளனர் எனவே அஜித்திற்கு பிடிக்காத நடிகர் சூர்யா தானா என ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











