சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இப்பொழுது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் டான் படத்தில் நடித்து வருகிறார்.
டான் படத்தை முடித்துவிட்டு அதைத் தொடர்ந்து மீண்டும் அறிமுக இயக்குனர் அசோக் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இந்நிலையில் அப்படத்திற்கு சிங்கப்பாதை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சிவகார்த்திகேயன் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

100 கோடியை கடந்து
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் மிகச் சிறந்த நடிகராக உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் டாப் நடிகர்களுக்கு இணையாக வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் 100 கோடியை கடந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

கல்லூரி மாணவராக
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றி பெற்றுள்ளது . இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்களும் மற்ற மொழிகளிலும் ரிலீஸாக தயார் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து பிரபலமான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வந்த சிவகார்த்திகேயன் இப்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார்.

பிரியங்கா அருள்மோகன் ஜோடியாக
மேலும் இதில் உள்ள சமுத்திரக்கனி,எஸ் ஜே சூர்யா, சூரி, ஆர் ஜே விஜய், ஷிவாங்கி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க டாக்டர் படத்தை தொடர்ந்து நடிகை பிரியங்கா அருள்மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டான் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து இப்பொழுது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி விடும். இதற்கிடையில் சயின்டிஃபிக் கதைகள் அதில் அயலான் என்ற படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார்.

அட்லியின் உதவி இயக்குனர்
டான் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மீண்டும் அறிமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அட்லியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அசோக் என்பவரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்கு சிங்கப் பாதை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
Recommended Video

சிவகார்த்திகேயன் இரட்டை வேடத்தில்
மேலும் அந்த படத்தில் வடிவேலு காமெடியனாக நடிக்கிறார். பிரித்விராஜ் வில்லனாக நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. டி இமான் இசையமைக்கிறார் எனப்படுகிறது. இந்த நிலையில் ரஜினி முருகன்,சீமராஜா ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் சிங்கப்பாதை படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கயிருப்பதாக சுவாரசியமான தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











