பீஸ்ட் படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறாரா விஜய்?
சென்னை: இயக்குனர் நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பீஸ்ட் படத்தைப் பற்றிய பல சூடான தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்க நடிகை பூஜா ஹெக்டே இதில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
பீஸ்ட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தை மிரட்டிய நிலையில் இந்த படத்தில் விஜய் ராணுவ வீரராக நடிப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.
ஆறு மாத குழந்தை உயிர் பிழைக்க நீங்கள் மனது வைத்தால் உதவ முடியும்

முதல் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடத்தி முடிக்கப்பட்டது
மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் இப்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் பல்வேறு கட்டங்களாக பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது அந்த வகையில் முதல் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடத்தி முடிக்கப்பட்டது.

பல ரொமான்டிக் காட்சிகளில் நடித்துள்ளார்
இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்படி பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடை பெற்று கொண்டு இருக்க இதில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கும் பூஜாவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். விஜய்யுடன் இதில் பல ரொமான்டிக் காட்சிகளில் நடித்துள்ளார்.

விஸ்வரூப வெற்றி அடைந்துள்ளது
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் சாதனை புரிந்து வருகிறது. சிவகார்த்திகேயன் வித்தியாசமான நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி இருப்பதால் குடும்பங்கள் கொண்டாடும் மெகா ஹிட் படமாக விஸ்வரூப வெற்றி அடைந்துள்ளது. கொரோனா சூழலுக்கு மத்தியிலும் இந்த படம் பெரும் வசூலை வசூலித்துள்ளது ஒட்டுமொத்த திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
Recommended Video

விஜய் பீஸ்ட் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்
டாக்டர் படத்தில் சர்ப்ரைஸாக சிவகார்த்திகேயன் ராணுவத்தில் பணிபுரிந்த டாக்டராக நடித்திருப்பார். இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி பீஸ்ட் படத்திலும் இதேபோன்ற சஸ்பென்ஸ் ஒன்றை விஜய்க்கு இயக்குனர் நெல்சன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி விஜய் பீஸ்ட் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.


Click it and Unblock the Notifications











