தல, தெரிந்து தான் இந்த ரிஸ்க் எடுக்கிறாரா? #Thala59

By Siva

Recommended Video

அஜித் பிங்க் பட ரீமேக்கில் தெரிந்து தான் நடிக்கிறாரா?- வீடியோ

சென்னை:பிங்க் பட ரீமேக்கில் நடிப்பது என்பதை தெரிந்து தான் செய்கிறாரா அஜித் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து அவர் ஹெச். வினோத் இயக்கத்தில் பிங்க் பட ரீமேக்கில் நடிக்கிறார்.

இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

அமிதாப்

அமிதாப்

பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் ஒரு முக்கியமான கதாபாத்திரம் தான். அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதே கதாபாத்திரத்தில் அஜித் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது தான் பெரிய கேள்வி. அதுவும் விஸ்வாசம் போன்ற ஒரு மாஸ் படத்தை பார்த்த பிறகு ஏற்பார்களா?

மாற்றம்

மாற்றம்

என்ன தான் ஹெச். வினோத் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப கதையில் மாற்றம் செய்தாலும் கருவை மாற்ற முடியாது. கதைக்கரு படி அந்த 3 பெண்களை சுற்றி தான் கதை நகரும். படம் முழுக்க ரொம்பவே சீரியஸாக இருக்கும். இதில் காமெடி, காதல் காட்சிகள், ஓபனிங் பாடல் எல்லாம் வைக்க முடியாது.

அஜித்

அஜித்

அமிதாப் பச்சனுக்கு வேண்டும் என்றால் அந்த கதாபாத்திரம் செட்டாகலாம். ஆனால் விஸ்வாசம் படத்தில் மாஸ் காட்டிவிட்டு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது அஜித்துக்கு ஒத்து வராது. அவரது கதாபாத்திரத்தை குறை சொல்லவில்லை. ஆனால் அதுவல்ல அவரின் ரசிகர்கள் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

கதையின் வேகம், அஜித்தின் கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் எதிர்பார்ப்பது அல்ல. பிங்க் படத்தை ரீமேக் செய்யலாம் என்று ஐடியா கொடுத்ததே அஜித் தான். படம் நிச்சயம் அருமையான படம். ஆனால் அதில் அஜித் நடிப்பது?. என்னமோ தல, வினோத் உங்கள் கதாபாத்திரத்தை மாற்றினாலும் அதை ரசிகர்கள் ஏற்க வேண்டும். படம் நன்றாக வந்தால் மகிழ்ச்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X