அதர்வா உடன் கூட்டணி அமைக்கும் கார்த்திக் நரேன்?

சென்னை: இயக்குனர் கார்த்திக் நரேன் இப்பொழுது மாறன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இதில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சாக்லேட் பாயாக இருந்து இப்பொழுது அதிரடி ஆக்சன் ஹீரோவாக மாறி வரும் அதர்வாவுக்கு அடுத்தடுத்த படங்கள் வெளியாக இருக்க லைகா தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் கபடி வீரராக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கார்த்திக் நரேன் அடுத்து இயக்கும் புதிய திரைப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதிரடி ஆக்சன் கதை களத்தில்

அதிரடி ஆக்சன் கதை களத்தில்

நடிகர் அதர்வா 100 வெற்றிக்குப் பிறகு மீண்டும் சாம் ஆண்டன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். முற்றிலும் ஆக்சன் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் விரைவில் தயாரிப்பு பணிகள் தொடங்க உள்ளது.இந்தப் படத்தினை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சாம் ஆண்டன் மற்றும் அதர்வா இரண்டாம் முறையாக இந்த படத்தில் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதர்வா கபடி வீரராக

அதர்வா கபடி வீரராக

ஒத்தைக்கு ஒத்த, தள்ளிப்போகாதே , குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்கள் அதர்வாவுக்கு அடுத்தடுத்து வெளியாக இருக்க அடுத்ததாக இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் கிராமத்து களத்தில் உருவாகி கிறது. சண்டிவீரன் திரைப்படத்திற்கு பிறகு அதர்வா மற்றும் சர்குணம் இணைந்துள்ள இந்த படத்தில் அதர்வா கபடி வீரராக நடிக்கிறார். ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Recommended Video

இந்த படத்துக்கு Anupama தான் முதல் Choice Atharva Speech | Thalli Pogathey Pressmeet
மாறன் இறுதிகட்ட படப்பிடிப்பு

மாறன் இறுதிகட்ட படப்பிடிப்பு

வித்தியாசமான திரில்லர் கதைகள் மூலம் தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குனராக மாறி உள்ள இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இப்பொழுது மாறன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். தனுஷ் இதில் கதாநாயகனாக நடிக்க மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. தனுஷ் ஸ்டைலில் பாதியும் , கார்த்திக் நரேன் ஸ்டைலில் பாதியும் கலந்த படமாக மாறன் உருவாக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

கார்த்திக் நரேன் அகர்வால் கூட்டணி

கார்த்திக் நரேன் அகர்வால் கூட்டணி

இந்த நிலையில் கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கும் புதிய திரைப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X