அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்?.. ரஜினி ஸ்டைலில் வந்த பதில்.. அது நடந்துவிடுமோ?

சென்னை: தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ஓம் திரைப்படம் வரவிருக்கிறது. அதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். மம்மூட்டி, சாய் பல்லவி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், வெங்கட் பிரபு இயக்கத்தி ஒரு படம் என பல படங்கள் இருக்கின்றன. இந்நிலையில் அவர் குறித்து தந்தை கஸ்தூரி ராஜா மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷ்; நடிகராக மட்டுமின்றி இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களை கொண்டிருப்பவர். அவருக்கு கடந்த சில வருடங்களாகவே எதிர்பார்த்தபடியே மிகப்பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இட்லி கடை வசூலில் நல்ல நிலையை எட்டினாலும்; விமர்சன ரீதியாக படம் அடிதான் வாங்கியது. குல தொழிலை ஆதரிக்கும்படியான கதையை தனுஷ் எடுத்துவிட்டார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Is Dhanush Entering Politics Fan Club President Subramaniam Siva Breaks Silence
Photo Credit:

கர படம் தோல்வி: கடைசியாக அவர் போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் மீதும் எக்கச்சக்க நம்பிக்கையை வைத்திருந்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. கர படத்தை பார்த்தவர்கள் எல்லாம்; இவரா போர்த்தொழில் படத்தை இயக்கியவர்; ஏதோ அதில் ஸ்கேம் செய்துவிட்டார் போல என்று கலாய்த்து கமெண்ட்ஸ்களை பறக்கவிட்டார்கள். கர திரைப்படம் கரை சேராதது கண்டிப்பாக தனுஷுக்கு பெரிய ஏமாற்றத்தைத்தான் கொடுத்திருக்கும்.

Also Read
Gatta Kusthi 2 Day 6 Box Office - கட்டா குஸ்தி 2 ஆறாவது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் சரிவு
Gatta Kusthi 2 Day 6 Box Office - கட்டா குஸ்தி 2 ஆறாவது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் சரிவு

அடுத்த படங்கள்: தனுஷின் லைன் அப்பை பொறுத்தவரை செம பிஸியாக இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்ததாக அவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் திரைப்படம் வரவிருக்கிறது. அடுத்த மாதம் படம் ரிலீஸ். தொடர்ந்து மாரி செல்வராஜ், வெங்கட் பிரபு உள்ளிட்டோரின் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இனிவரும் படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

கொடி விஷயம்: இது ஒருபக்கம் இருக்க தனுஷுக்கென்று பல வருடங்களாக இருக்கும் ரசிகர்கள் பலர்; தனுஷ் ரசிகர் நற்பணி மன்றத்தில் சேர்ந்திருக்கிறார்கள். தனுஷின் பிறந்தநாளுக்கு எல்லாம் அவர்கள் நலத்திட்ட உதவிகளையும் செய்வார்கள். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு தனுஷ் ரசிகர் நற்பணி மன்றத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. அதனையடுத்து, அவர் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சுக்களும் எழுந்தன. இந்நிலையில் அதுகுறித்து இயக்குநரும், அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தின் தலைவருமான சுப்ரமணியம் சிவா விளக்கமளித்திருக்கிறார்.

சிவாவின் விளக்கம்: அவர் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், "இந்தக் கொடி 15 வருடங்களாக எங்களிடம் இருக்கிறது. அதை வைத்துதான் நாங்கள் தோரணை கட்டுவோம். அந்தக் கொடியை இப்போது காரில் மாட்டும்படி எடுத்து வந்துவிட்டார்கள். வருடா வருடம் நாங்கள் எங்கள் மன்றத்தின் பொறுப்பாளர்களை புதுப்பிப்போம். புதிய மன்றங்கள் தொடங்குவது பற்றி ஆலோசிப்போம்.

வருடா வருடம் இந்த விழாவை நடத்துவோம். அப்போது அந்தக் கொடியை காரில் கட்டிவிட்டோம். அது புதிய கொடி என்று சொல்கிறார்கள். ஆனால் அது எங்களிடம் ஏற்கனவே இருந்ததுதான். அதில் வேறு ஒன்றும் இல்லை. எது எப்போது நடக்குமோ அது நடக்கும்" என்றார். தனுஷ் அரசியலுக்கு வருவார் என்று கொடி அறிமுக விழாவிலிருந்தே பேச்சுக்கள் கிளம்பின. இப்போது சுப்ரமணியம் சிவா பொடி வைத்து பேசியிருப்பதால் கண்டிப்பாக அவரது அரசியல் வருகை உறுதிதான் என்ற கருத்து எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X