நயன்தாராவோட நடிக்க சிம்பு மாதிரி மாறிட்டாரே கவின்.. இந்த ஸ்டாரை போய் ப்ளடி பெக்கராக மாத்துனாங்களே!
சென்னை: நடிகை நயன்தாராவுடன் இணைந்து அடுத்ததாக புதிய படத்தில் கவின் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நடிகர் கவின் தனது லேட்டஸ்ட் லுக் போட்டோக்களை சற்றுமுன் வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால், அந்த நிகழ்ச்சியுடன் அது பிரேக்கப் ஆகி பிரிந்தது. உடனடியாக வேறு ஒரு பெண்ணை திருமணமும் செய்துக் கொண்ட கவின் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் வெளியான லிப்ட் மற்றும் டாடா உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களாக மாறின. ஸ்டார் திரைப்படமும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது.
2024 மிஸ் ஆகிடுச்சு: கவினுக்கு கடந்த 2024ம் ஆண்டு மிகப்பெரிய ஆண்டாக அமையும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை வசூல் ரீதியாக பெறவில்லை. இருந்தாலும் 20 கோடி வரை வசூல் செய்து லாபத்தையே பெற்றுத் தந்தது. ஆனால், நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் கவின் நடித்த ப்ளடி பெக்கர் திரைப்படம் தான் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களை கடுப்பாக்கிவிட்டது. அந்த படத்தின் கதையும் கவினின் நடிப்பும் ரொம்பவே வித்தியாசமாகவே இருந்தது. ஆனால், டார்க் ஹியூமர் சரியாக வொர்க்கவுட் ஆகாத நிலையில், படத்தை ரசிகர்கள் கொண்டாடவில்லை.
மாநாடு சிம்பு போல: "Just go with your gut!" என கேப்ஷன் கொடுத்து தற்போது செம ஸ்மார்ட்டாக மாநாடு படத்தில் வரும் சிம்பு போல செம கூலாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகர் கவின். இந்த ஹேண்ட்ஸம் ஸ்டாரை எப்படித்தான் ப்ளடி பெக்கர் போல மாற்றத் தோன்றியதோ என கவின் ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் கமெண்ட் போட்டு சிவபாலனை திட்டித் தீர்த்து வருகின்றனர். கவினின் அடுத்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்றும் அதை இந்த லுக்கே வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்கின்றனர்.

நயன்தாரா படத்திற்கா?: உன்னாலே உன்னாலே, பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் நடிகராக மாறிய நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கவின் கிஸ் படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்குத்தான் கவின் இப்படியொரு லுக்கிற்கு மாறியுள்ளாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. நடிகை தேவயாணி ஏற்கனவே கிஸ் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறிய நிலையில், அந்த படத்திற்கான தோற்றமாக இருக்குமா? அல்லது நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படத்திற்கான லுக்கா என்பது கூடிய சீக்கிரமே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானால் தெரிந்துவிடும் என்கின்றனர். இந்த ஆண்டு கவினுக்கு வெற்றியாண்டாக அமைய வேண்டும் என்றும் ரசிகர்கள் வேண்டுதல்களை வைத்து வருகின்றனர். விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயனை தொடர்ந்து கவினும் ஹீரோவாக மாறி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications