twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டாரா ரஜினி?

    By Sudha
    |

    சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் அளித்துள்ள பதிலைப் பார்க்கும்போது ரஜினி மீதான மக்களின் அரசியல் கிரேஸ் குறைந்து விட்டதோ என்று தோன்றுகிறது.

    ரஜினிகாந்த்தை அரசியலுக்கு இழுக்கும் முயற்சிகள் பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. ஆனால் ரஜினிதான் ஒவ்வொரு முறையும் நழுவி வருகிறார்.

    இதற்கு முக்கியக் காரணமாக, அவருக்கும் பாமகவுக்கும் இடையே பாபா படத்தின் போது ஏற்பட்ட மோதலைக் கூறலாம். பாபா படத்திற்கு பாமகவினர் செய்த பாதகம் அனைவரும் அறிந்ததுதான். இந்த கோபத்தில் அடுத்து வந்த தேர்தலில் பாமகவை எதிர்த்து வாக்களிக்குமாறு ரஜினி கோரிக்கை விடுத்தார். ஆனால் அதற்குப் பலன் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர் அரசியல் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. தான் உண்டு, தனது வேலை உண்டு என்று இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவரை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.

    ஒன்இந்தியா கேள்வி

    ஒன்இந்தியா கேள்வி

    இதை வைத்து ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த கருத்துக் கணிப்பை ஒன்இந்தியா தமிழ் தனது இணையதளத்தின் வாயிலாக நடத்தியது. இதில் பதிவான மொத்த வாக்குகள் 38,484.

    லிங்காவுக்காக இப்படி

    லிங்காவுக்காக இப்படி

    இதில் கலந்து கொண்டவர்களில் அதிகபட்சமாக 38.78 சதவீதம் பேர் லிங்கா படம் வெளியாகவுள்ளதால், பரபரப்புக்காக இப்படி நடப்பதாக கூறியுள்ளனர். அதாவது 14,294 வாக்குகள் இதற்குக் கிடைத்துள்ளன.

    வருவார், ஆனா மாட்டாரு

    வருவார், ஆனா மாட்டாரு

    அரசியலுக்கு ரஜினி வர மாட்டார் என்று 10,393 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது 27.01 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

    தனிக்கட்சிக்கு 3வது இடம்

    தனிக்கட்சிக்கு 3வது இடம்

    ரஜினி தனிக்கட்சி தொடங்கலாம் என்று 10.05 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதாவது 6500 வாக்குகள் இதற்குக் கிடைத்துள்ளன.

    பாஜகவில் சேர ஆதரவு குறைவு

    பாஜகவில் சேர ஆதரவு குறைவு

    பாஜகவில் ரஜினி சேர ஆதரவு மிகக் குறைவாக உள்ளது. அதாவது 9.29 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது.

    அதிமுகவில் சேரலாமா

    அதிமுகவில் சேரலாமா

    ரஜினிகாந்த் பேசாமல் அதிமுகவில் சேரலாம் என்றும் சிலர் வாக்களித்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 7.88 சதவீதம் ஆகும். அதாவது 3033 வாக்குகள் கிடைத்துள்ளன.

    ரஜினி மனதில் என்ன உள்ளதோ....!

    English summary
    Oneindia Tamil opinion poll shows that most of the readers are not in line with super star Rajinikanth.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X