150 கோடி ரூபாயில் தனுஷ் வீடு கட்ட ரஜினிதான் காரணமா?.. கோலிவுட்டில் பரபரக்கும் தகவல்
சென்னை: நடிகர் தனுஷ் சமீபத்தில் போயஸ்கார்டனில் 150 கோடி ரூபாய்க்கு வீடு கட்டினார். அதுகுறித்த தகவல் ஒன்று கோலிவுட்டில் பரவி வருகிறது.
துள்ளுவதோ இளமை மூலம் அறிமுகமான தனுஷ் பலரால் உருவகேலியை சந்தித்தவர். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத தனுஷ் தனது திறமையால் இன்று தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். கோலிவுட்டில் ஆரம்பித்த அவரது திரைப்பயணம் தற்போது ஹாலிவுட் வரை சென்றிருக்கிறது.

ரஜினி மகளுடன் திருமணம்
நடிகர் தனுஷ் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். அந்த சமயத்தில் அப்படி பாராட்டு தெரிவித்தவர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. அப்போது ஏற்பட்ட பழக்கம் இருவருக்குமிடையே காதலாக மலர்ந்தது. தொடர்ந்து இருவருக்கும் 2004ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கின்றனர்.

பிரிவில் முடிந்தது ஐஸ்வர்யா, தனுஷ் திருமணம்
இருவரின் திருமண வாழ்க்கையும் சிறப்பாக சென்றுகொண்டிருந்த சூழலில் திடீரென கடந்த 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். அவர்களின் இந்த முடிவு ரசிகர்களையும், திரையுலகத்தினரையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இருவரது பிரிவுக்கும் ஏகப்பட்ட காரணங்கள் பலரால் யூகங்களாக சொல்லப்பட்டன. இருப்பினும் இருவரது முடிவுக்கும் மரியாதை கொடுக்கும்படி ஊடகங்கள் வாயிலாக தனுஷும், ஐஸ்வர்யாவும் கோரிக்கை வைத்திருந்தனர். நிலைமை இப்படி இருக்க இருவரையும் சேர்த்து வைக்க பலர் முயற்சி எடுத்ததாகவும் ஆனால் அது பலன் தரவில்லை எனவும் தகவல் வெளியானது. இரண்டு மகன்களும் தனுஷிடமும், ஐஸ்வர்யாவிடமும் மாறி மாறி வளர்ந்து வருகின்றனர்.

தனுஷின் பிரமாண்ட வீடு
இதற்கிடையே ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டனிலேயே வீடு கட்டும் பணியை தொடங்கினார் தனுஷ். இந்த வீட்டை தனுஷ் சுமார் 150 கோடி ரூபாயில் கட்டியிருக்கிறார். இதற்கான கிரஹப்பிரவேசம் சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. தனுஷின் அந்த பிரமாண்ட வீடு தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.

பிரமாண்ட வீடு கட்ட இதுதான் காரணமா?
இந்நிலையில் தனுஷ் 150 கோடி ரூபாய் முதலீட்டில் அதுவும் ரஜினி வசிக்கும் போயஸ் கார்டனிலேயே கட்டுவதற்கான காரணம் என்ன என்பதுதான் கோலிவுட்டில் பலரது கேள்வியாக இருந்தது. தற்போது அதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, நடிகர் ரஜினிகாந்த் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் தனுஷின் தாயை அவ்வளவாக எப்போதும் மதிக்கமாட்டார். இதனால் தனுஷுக்கும், ரஜினிக்கும் இடையே இதுதொடர்பாக ஏற்கனவே மனஸ்தாபம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே ரஜினி வசிக்கும் போயஸ் கார்டனிலேயே பிரமாண்டமான வீட்டினை கட்ட வேண்டுமென முடிவு செய்துதான் இவ்வளவு பெரிய வீட்டை கட்டியிருக்கிறார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.


Click it and Unblock the Notifications











