»   »  நிஜமாகவே சல்மான் கானுக்கு திருமணமா?: அட, அதை வேற ஏன் கேட்குறீங்க!

நிஜமாகவே சல்மான் கானுக்கு திருமணமா?: அட, அதை வேற ஏன் கேட்குறீங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் நிஜமாகவே நடிகை லூலியாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா என்ற கேள்விக்கு பதில் அளிக்க அவரது தம்பி அர்பாஸ் கான் மறுத்துவிட்டார். இந்நிலையில் சல்மான் புதிதாக ஏதோ சொல்கிறாரே.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 50 வயதாகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரது தம்பி, தங்கைகளுக்கு எல்லாம் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தான் சல்மான் கானுக்கும் ரோமானியாவை சேர்ந்த மாடலும், நடிகையுமான லூலியா வந்தூருக்கும் திருமணம் என்ற செய்தி வெளியானது.

அதுவும் இந்த ஆண்டே திருமணம் என்று கூறப்பட்டது.

ப்ரீத்தி ஜிந்தா

ப்ரீத்தி ஜிந்தா

திருமண செய்தி வெளியான பிறகு லூலியா சல்மான் கானின் தாயுடன் விமான நிலையத்தில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது. அதன் பிறகு சல்மானும், லூலியாவும் ஜோடி போட்டு நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அர்பாஸ் கான்

அர்பாஸ் கான்

சல்மான் கானின் தம்பியும், நடிகருமான அர்பாஸ் கான் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவரிடம் சல்மானின் திருமணம் பற்றி கேட்டதற்கு அது குறித்து பேச இது உகந்த இடம் இல்லை என்று கூறிவிட்டார்.

லூலியா

லூலியா

லூலியா தனது திருமணம் பற்றி இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, வதந்திகளுக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை. எனக்கு இதற்கு முன்பு திருமணம் நடைபெறவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். திருமணத்திற்கு இப்பொழுது அவசரம் இல்லை என தெரிவித்துள்ளார்.

சல்மான் கான்

சல்மான் கான்

லூலியா திருமணத்திற்கு என்ன அவசரம் என்று கூறினால் சல்மான் தெரிவித்துள்ளதை பார்த்தால் திருமணம் எதுவும் இல்லை போன்று. எனக்கு திருமணம் நடப்பதாக இருந்தால் அந்த செய்தியை உங்களுக்கு நானே தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார் சல்மான்.

English summary
Looks like Bollywood actor Salman Khan is in no hurry to marry Lulia Vantur.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil