உருவாகும் புதிய டிரண்ட்: தாடியில் கலக்கும் ஹீரோக்கள்
சென்னை: பொதுவாக சினிமா நாயகர்களைப் பார்த்து பேஷனை உருவாவது உண்டு. அதிலும், குறிப்பாக ஆடைகள், அலங்கார முறைகள் இவற்றில் அடங்கும்.
நாயகிகள் அணிந்து வரும் ஆடைகளுக்கு, அணிகலன்களுக்கு அப்படத்தின் பெயரையோ அல்லது சம்பந்தப் பட்ட நடிகையின் பெயரையோ வைப்பது வழக்கம். உதாரணத்திற்கு 'நதியா' கொண்டையைக் கூடச் சொல்லலாம்.
அந்த வகையில் ஆண்கள், நடிகர்களின் ஆடையைக் குறித்து அதிக அள்வில் ஆர்வம் காட்டுவதில்லை என்றாலும் கூட, அவர்களது மீசை, தாடி மற்றும் ஹேர்ஸ்டைலை ரசிப்பது உண்டு. அந்தவகையில், சமீபத்தில் வீச்சரிவாள் மீசையுடன் சுற்றிய ஹீரோக்கள் சிலர் தாடியுடன் படத்தில் தோன்ற உள்ளனர்.

சோகம்....
பொதுவாக தாடி என்பது நம்மவர்களுக்கு காதலில் தோல்வி அல்லது சோகத்தை வெளிக்காட்டும் அம்சம் என்ற நிலை மாறி, அதுவும் ஒரு ஸ்டைல் என்றநிலை திரைப்படங்களில் உருவாகி வருகிறது. அந்தவகையில் தாடியுடன் உலா வர உள்ள நடிகர்களைக் குறித்து பார்க்கலாம்.

சூர்யா....
லிங்குசாமி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா, அதில் வித்தியாசத்தைக் காட்டுவதற்காக ஒரு கேரக்டரில்தாடியுடன் தோன்ற உள்ளாராம்.

தனுஷ்...
தனது வேலையில்லாத பட்டதாரி படத்தில் தாடியுடன் தோன்ற இருக்கிறாராம் தனுஷ். கே.வி.ஆனந்தின் அனேகனிலும் அதே தோற்றத்தில் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஷால்....
நடிகர் விஷாலும் கூட தாடியுடன் தான் வலம் வருகிறார். காரணம் திரு இயக்கத்தில் உருவாகும் நான் சிகப்பு மனிதன் படம் தான்.

விஜய் சேதுபதி....
வளர்ந்து வரும் நாயகர்களில் கெட்டப்புகளில் வித்தியாசம் காட்டும் விஜய் சேதுபதி, சமீபகாலமாக வெட்டருவா மீசையுடன் அடையாளம் தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தார். இவர் தற்போது நடித்து வரும் படங்களுக்காக தாடியுடன் காணப்படுகிறார். ஏற்கனவே விஜய் சேதுபதி ‘சூதுகவ்வும்' படத்தில் தாடியுடன் வயதான தோற்றத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது.

மாதவன்...
முன்னாள் குத்துச்சண்டை வீரரின் கதாபாத்திரத்தில் நடித்து மாதவன், அதற்காக தாடி வளர்த்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் ரிலீசாக உள்ளது.

சிம்பு....
கௌதம் மேனன் படத்தில் நடிக்க இருக்கும் சிம்பு, அதற்காக தாடி வளர்க்கத் தொடங்கியுள்ளாராம்.

இளம் நாயகர்கள்...
வாரிசு நடிகர்களான கார்த்தி, விக்ரம் பிரபு மற்றும் கௌதம் கார்த்திக் கூட தங்களது அறிமுகப் படத்தில் தாடியுடன் தான் தோன்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆல் டைம்....
இவர்கள் தவிர விமல், சசி குமார், அருள்நிதி, விஜய டி ராஜேந்தர் போன்ற நடிகர்கள் ஆல் டைம் தாடியுடன் தான் வலம் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











