Don't Miss!
- News
தமிழுக்கு மாபெரும் "கவுரவம்".. ஹஜ் யாத்திரையின் அரஃபா உரையை தமிழிலும் மொழிபெயர்க்க சவூதி அரசு முடிவு
- Sports
இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சினிமாவை விட்டு விலகுகிறேன்.. பிரபல நடிகர் எடுத்த அதிரடி முடிவு.. திடீர் முடிவுக்கு என்ன காரணம்!
சென்னை : நடிகர் சித்தார்த் சினிமாவை விட்டு விலகப் போவதாக திடீரென அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகராக திகழ்பவர் நடிகர் சித்தார்த். இவர், உதவி இயக்குனராக தன் திரைப்பயணத்தை தொடங்கினார்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலம் நாயகராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல தரமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
கௌதம் மேனனுக்கு இரண்டு EX காதலிகளா... அவரே சொன்ன தகவல்!

நடிகர் சித்தார்த்
நடிகர் சித்தாத், ஆயுத எழுத்து, உதயம் என் எச் 4, தீயாய வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவர் போன்ற ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக இயங்கும் நடிகர்களில் முக்கியமானவர் சித்தார்த். தான் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்துவது மட்டுமன்றி, அரசியல் ரீதியான கருத்துகளையும் துணிச்சலாக வெளியிட்டு வருகிறார். சில சமயங்களில் சித்தார்த் தனது ட்வீட்களின் மூலம் சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு.

சர்ச்சை கருத்து
பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை பகிர்ந்து இருந்தார். அதேபோல, பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேய்வால் குறித்து இவர் கூறிய கருத்து இணையத்தில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், இணையத்தில் பலர் சித்தார்த்தை கண்டபடி விமர்சிக்கத் தொடங்கினர்.

படவாய்ப்பு இல்லை
நடிகர் சித்தார்த்திற்கு தற்போது இந்தியன் 2, மகா சமுத்திரம், சைத்தான் கே பச்சா, திரைப்படங்களை மட்டுமே கைவசம் வைத்து இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக 2019ம் ஆண்டு அருவம் திரைப்படம் வெளியானது. க்ரைம், த்ரில்லிங் திரைப்படமான அருவம் படத்தின் கதை சிறப்பாக இருந்த போதும் படம் வரவேற்பை பெறவில்லை.

சினிமாவை விட்டு விலக முடிவு
தற்போது நடிகர் சித்தார்த், டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரின் வெளியாக உள்ள எஸ்கேப் லைவ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இத்தொடர் மே 20ந் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சித்தார், இனியும் நல்ல கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்றால், சினிமாவிலிருந்து விலகிவிட முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிங்காக உள்ளது.