மீண்டும் அப்பா -மகனாக நடிக்கும் சூர்யா... எந்தப் படத்துலன்னு பாக்கலாமா!

சென்னை : நடிகர் சூர்யா, 24, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் அப்பா -மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களில் இரண்டு கேரக்டர்களிலும் சிறப்பான வித்தியாசத்தையும் அவர் காட்டியிருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் அப்பா -மகன் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார். அவரது சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் அடுத்தடுத்து நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்தது.

மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா

மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா

இதில் சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றன. சூரரைப் போற்று படமும் பாலியல் ரீதியான வன்முறைகள் குறித்து பேசியது. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடித்து வருகிறார்.

முதல்கட்ட சூட்டிங்

முதல்கட்ட சூட்டிங்

இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. படத்தின் முதல்கட்ட சூட்டிங் 34 நாட்கள் தொடர்ந்து கன்னியாகுமரியில் நடத்தப்பட்டது. படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாகியுள்ளார் க்ரீத்தி ஷெட்டி. இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

மீண்டும் சூர்யாவுடன் ஜோதிகா?

மீண்டும் சூர்யாவுடன் ஜோதிகா?

இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் மதுரையிலும் மூன்றாவது கட்ட சூட்டிங் கோவாவிலும் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தில் சூர்யாவுடன் நடிகை ஜோதிகா 16 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. மேலும் அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்களும் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

அப்பா -மகனாக சூர்யா?

அப்பா -மகனாக சூர்யா?

ஆனால் இதுகுறித்து எந்தவிதமான அறிவிப்பும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் படத்தில் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அப்பா -மகன் கேரக்டர்களில் அவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் மகன் கேரக்டரில் சூர்யா வாய் பேச முடியாத, காது கேட்காத கேரக்டரில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வாடிவாசல் படத்தில் சூர்யா

வாடிவாசல் படத்தில் சூர்யா

இந்நிலையில் அப்பா கேரக்டரில் நடிக்கும் சூர்யாவிற்குத்தான் ஜோதிகா ஜோடியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், ஜூலை மாதத்தில் வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Director Sarov Shanmugam | Surya Jyothika இந்த படத்துக்கு செம்ம Support | Filmibeat Tamil
உண்மை சம்பவங்கள்

உண்மை சம்பவங்கள்

இதை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா இணையவுள்ள படத்திலும் அடுத்தடுத்த பிராஜக்டிலும் சூர்யா நடிக்கவுள்ளார். சூரரைப் போற்று படம் போல சூர்யா -சுதா கொங்கரா இணையும் படம் பயோ பிக்காக இருக்காது என்றும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட உள்ளதாகவும் முன்னதாக சுதா கொங்கரா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X