தனுஷுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இப்படி ஒரு போட்டியா?.. ஈகோ முத்திடுச்சோ?.. என்ன நடக்குது?

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது வளர்ந்துவிட்ட நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். கடைசியாக வெளியான அவரது ஐந்து படங்கள் ஒன்று மெகா ஹிட்டாகியிருக்கின்றன இல்லையென்றால் சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. பராசக்தி படமும் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூலில் நூறு கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இது ஒருபக்கம் இருக்க சிவாவுக்கும், தனுஷுக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே மோதல் என்ற தகவல் வந்துகொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு கடந்த சில வருடங்கள் நல்லபடியாகவே அமைந்திருக்கிறது. ப்ரின்ஸ் படத்தின் தோல்வி அவரது கரியரை முடித்துவிடும் என்றுதான் பலரும் எதிர்பர்த்தார்கள். ஆனால் சுதாரித்துக்கொண்ட எஸ்கே அந்தப் படத்துக்கு பிறகு தேர்ந்தெடுக்கும் கதைகளில் கூடுதல் கவனம் செலுத்தினார். அப்படி அவர் நடித்த மாவீரன், அயலான், அமரன் ஆகிய படங்கள் அவரை தோல்வியிலிருந்து மீட்டெடுத்தன. அதிலும் அமரன் படத்தை சொல்லவே வேண்டாம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

Is the Sivakarthikeyan-Dhanush Rivalry Real Fresh Kollywood Buzz Sparks Debate
Photo Credit:

பராசக்தியும் சூப்பர் ஹிட்: அமரனுக்கு பிறகு வெளியான மதராஸி படமும்கூட 80 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு அடுத்ததாக வெளியான பராசக்தியும் டீசன்ட்டான வெற்றியை பெற்றது என்றுதான் சொல்ல வேண்டும். மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஏனெனில் அந்த அளவு படத்துக்கு ஹைப் எகிறியிருந்தது. இருப்பினும் படம் திருப்திப்படுத்தவில்லை. அடுத்ததாக சேயோன் படத்தில் நடித்துவருகிறார்.

Also Read
எஸ்.ஏ.சந்திரசேகர் கால் தரையில் நிற்கவில்லை.. விஜய்யின் முறைப்பொண்ணு ஓபன் டாக்.. இவ்வளவு நடந்ததா?
எஸ்.ஏ.சந்திரசேகர் கால் தரையில் நிற்கவில்லை.. விஜய்யின் முறைப்பொண்ணு ஓபன் டாக்.. இவ்வளவு நடந்ததா?

தனுஷுடன் போட்டி?: இதற்கிடையே சிவகார்த்திகேயன் சினிமாவுக்குள் வருவதற்கான காரணங்களில் தனுஷும் ஒருவர். ஆனால் தன்னை திரைத்துறையில் யாரெல்லாம் வளர்த்தார்களோ அவர்களை எல்லாம் இப்போது சிவா ஒதுக்கிவிட்டார் அல்லது போட்டி போடுகிறார் என்றும் பேச்சுக்கள் தொடர்ந்து எழுகின்றன. அவை அனைத்துக்கும் இவர்களின் பேச்சுக்கூட சலங்கையை கட்டிவிடுகின்றன. கொட்டுக்காளி பட விழாவில் சிவாவின் பேச்சும், இட்லி கடை ஆடியோ லான்ச்சில் தனுஷின் மேனேஜரின் பேச்சும் பெரிய பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியிருக்கின்றன.

புதிய தகவல்: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது அமரன் படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை அழைத்து தனுஷ் கதை கேட்டு ஓகேயும் சொல்லிவிட்டார். சிவாவுக்கு ஒருவர் மெகா ஹிட் கொடுத்தால் வேண்டுமென்றே அவரை தன் அடுத்த பட இயக்குநராக தனுஷ் கமிட் செய்கிறார் என புகார்கள் எஸ்கே ரசிகர்களிடமிருந்து வந்தது. சூழல் இப்படி இருக்க தனுஷை வைத்து தமிழரசன் பச்சமுத்து இயக்கவிருக்கிறார். தற்போது சிவாவோ தன் அடுத்த பட இயக்குநராக தமிழரசனை ஃபிக்ஸ் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் சிவாவுக்கும், தனுஷுக்கும் இப்படி ஒரு மோதல் திரைமறைவில் நடப்பது உண்மைதானோ; இல்லையென்றால் தொடர்ந்து அவர்கள் பற்றி இது மாதிரியான தகவல்கள் வராது என்று உறுதியாக சொல்ல தொடங்கியிருக்கிறார்கள். மேலும் இரண்டு பேருக்குமிடையே ஈகோ முற்றிவிட்டது போல என கமெண்ட்ஸும் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X