திரிஷாவை 4 சுவத்துக்குள்ள வெச்சுக்கோ.. விஜய்யை போட்டு பிளக்கும் சமுத்திரகனி.. டென்ஷன் ஆகிட்டாரு

சென்னை: நடிகை திரிஷாவுடன் நேற்று முன்தினம் ஒரு திருமணத்துக்கு விஜய் ஜோடியாக வந்தார். மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு சென்றிருக்கும் நிலைமையில் அவர் இப்படி செய்தது அனைவருக்கும் ஷாக்கை கொடுத்திருக்கிறது. இதெல்லாம் தேவையில்லாத வேலை என அவரை ஆதரித்தவர்களே கடுப்பாகிவிட்டார்கள். அந்தவகையில் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை வரவேற்ற இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி; தற்போது இவ்விவகாரத்தில் பயங்கர டென்ஷன் ஆகியிருக்கிறார்.

சங்கீதா விவாகரத்து கேட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள்; நடிகை திரிஷாவுடன் ஒரு திருமணத்துக்கு ஜோடியாக வந்திறங்கினார் விஜய். அவர்கள் இரண்டு பேரும் ஒரே கலர் டோனில் உடைகள் அணிந்திருந்தது; இதுவரை எழுந்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியிருப்பதாகவே கருதப்படுகிறது. அவர் அப்படி செய்தது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பெரிய ஷாக். அரசியலில் ஓரளவுக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் அவரே தனது பெர்சனல் இமேஜை இப்படி டேமேஜ் ஆக்கிக்கொண்டாரே என கவலையுடன் இருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

Is This a Game Samuthirakani Slams Vijay Over Trisha Wedding Appearance
Photo Credit:

இதற்கெல்லாம் முட்டு கொடுக்க முடியாது: கரூர் விவகாரம், ஜனநாயகன் பிரச்னை என அனைத்திலும் விஜய்க்கு முழு ஆதரவை கொடுத்தார்கள் அவரது தொண்டர்களும், ரசிகர்களும். அவருக்கு பதிலாக இவர்களே நெஞ்சில் ஈட்டியை வாங்கினார்கள். ஆனால் இந்த விஷயத்தில் தங்களது சப்போர்ட்டை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். என்ன செய்தாலும் தன்னுடைய ரசிகர்கள் தன்னுடன் இருப்பார்கள் என்ற மிதப்பில்தான் விஜய் இப்படி செய்திருக்கிறார் என அனைவரிடமும் ஒரு எண்ணம் உருவாகிவிட்டது.

Also Read
விவாகரத்து செய்யுங்கள்.. திரிஷாவுடன் இருங்கள்.. ஆனால் தனுஷ் மாதிரி இருங்க.. விஜய்க்கு பறக்கும் அட்வைஸ்
விவாகரத்து செய்யுங்கள்.. திரிஷாவுடன் இருங்கள்.. ஆனால் தனுஷ் மாதிரி இருங்க.. விஜய்க்கு பறக்கும் அட்வைஸ்

தேர்தலில் பாதிக்குமா?: விவாகரத்து விஷயம் வெடித்த போது இது அவருக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தாது என்று திடமாக நம்பினார்கள் தவெகவினர். ஆனால் திரிஷாவுடன் ஜோடி போட்டு வந்தது கண்டிப்பாக Back Fire ஆகும் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். அதை சரி செய்யும் பொறுப்பில் இருக்கும் தலைவரே இப்படி அலட்சியமாக இருக்கும் நிலைமையில்; நம்மால் என்ன செய்ய முடியும் எனவும் புலம்புகிறார்கள் ரசிகர்கள். கண்டிப்பாக தேர்தலில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

கடுப்பான சமுத்திரகனி: இந்நிலையில் திரிஷாவுடன் விஜய் வந்தது குறித்து செம டென்ஷன் ஆகியிருக்கிறார் சமுத்திரகனி. நேற்று டெக்ஸ்லா பட பூஜையில் கலந்துகொண்டுவிட்டு இயக்குநர் பாலா மற்றும் ஆர்.வி .உதயகுமாரிடம் இதுகுறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, 'இது என்ன விளையாட்டா?. இவ்வளவு விஷயம் நடந்திருக்கிறது. நீ அவங்களை வெளியே கூட்டிட்டு போற. நான்கு சுவற்றுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே. யாரை நீ பழி வாங்குற. எதற்காக இந்த போஸ். அனைத்தும் நன்றாக வந்துகொண்டிருந்தது.

கட்சிக்காரனே சொல்றான்: இனிமேல் நம்மால் முடியாது என கட்சிக்காரனே சொல்கிறான்" என்றார். அதை இயக்குநர் பாலா சைலெண்ட்டாக கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது. திரைத்துறைக்குள்ளேயே விஜய்யை இப்படி கழுவி ஊற்ற ஆரம்பித்துவிட்டார்களே என மேற்கொண்டு சோகமடைந்திருக்கிறார்கள் தவெக தொண்டர்கள். முன்னதாக, விஜய் அரசியலுக்கு வந்தபோது அதை மனதார பாராட்டி வரவேற்றவர்களில் சமுத்திரகனியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X