twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாநாடு சக்சஸ் மீட்டிற்கு வராதது ஏன்... மெளனம் கலைவாரா சிம்பு ?

    |

    சென்னை : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படத்தின் சக்சஸ் மீட்டில் ஹீரோ சிம்பு கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள காரணம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Recommended Video

    Simbhu Fans-ஐ மேடையில் புகழ்ந்த Director Vnekat Prabhu | Maanadu Success Meet

    சிம்புவின் சினிமா வாழ்க்கையிலேயே மிகப் பெரிய வெற்றியை பெற்ற படமாக மாறி உள்ளது மாநாடு படம். இது சிம்புவிற்கு புதிய துவக்கத்தையும் தந்துள்ளது. டைம் லூப், த்ரில்லர், அரசியல் படமான மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.

    வாய்க்கு வந்தபடி பேசாம… படத்தை பார்த்துட்டு பேசு…ப்ளு சட்டை மாறனை விளாசிய வெங்கட் பிரபு!வாய்க்கு வந்தபடி பேசாம… படத்தை பார்த்துட்டு பேசு…ப்ளு சட்டை மாறனை விளாசிய வெங்கட் பிரபு!

    மாநாடு சக்சஸ் மீட்

    மாநாடு சக்சஸ் மீட்

    நவம்பர் 25 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட மாநாடு படத்தின் 25 வது நாள் வெற்றி கொண்டாட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. சென்னையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் மாநாடு படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். ஆனால் ஹீரோவான சிம்பு கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையாக்கப்பட்டது.

    சிம்புவை விளாசிய எஸ்ஏசி

    சிம்புவை விளாசிய எஸ்ஏசி

    கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் விறுவிறுப்பாக நடப்பதால் சிம்பு வரவில்லை என கூறப்பட்டது. இதை குறிப்பிட்டு விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தயாரிப்பாளர்களை மதிக்க வேண்டும். ஷுட்டிங் அவ்வளவு முக்கியமா என பல விதமாக கேள்விகளை முன்வைத்தார்.

    இது தான் காரணமா

    இது தான் காரணமா

    ஆனால் லேட்டஸ்டாக கிடைத்துள்ள தகவலின்படி, சிம்பு இந்த விழாவில் கலந்து கொள்ளாததற்கு ஷுட்டிங் காரணம் இல்லையாம். வெந்து தணிந்தது காடு படத்தின் ஷுட்டிங் சென்னை ராயபுரத்தில் தான் நடந்து வருகிறது. மாநாடு படம் ரூ.108 கோடி வசூலித்ததாக வெளியிடப்பட்ட போஸ்டரில் தன்னுடைய ஃபோட்டோ இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என சிம்பு விரும்பினாராம். சக்சஸ் மீட்டிலும் இது போன்று குறிப்பிட வேண்டும் என அவர் விரும்பினாராம்.

    கரெக்ட் தானே இவர் செய்தது

    கரெக்ட் தானே இவர் செய்தது

    ஆனால் இத்தனை கோடி வசூல் ஆனதற்கு சிம்பு மட்டும் காரணம் என்பது போல் குறிப்பிட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுத்து விட்டாராம். வசூல் தொகையை குறிப்பிட்டு வருமான வரித்துறையில் சிக்கிக் கொள்ளவும் விரும்பாததால் சக்சஸ் மீட் மற்றும் 25 வது நாளுக்கான போஸ்டரில் குறிப்பிட வேண்டாம் என தவிர்த்து விட்டாராம்.

    இது கூட காரணமாக இருக்குமோ

    இது கூட காரணமாக இருக்குமோ

    இது மட்டுமல்ல இன்னும் சில வட்டாரங்கள் அளித்துள்ள தகவலின் படி, படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம் விற்பனை செய்யப்பட்ட தொகை பேசப்பட்டபடி சரியாக வழங்கப்படவில்லை என சுரேஷ் காமாட்சி மீது சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கும் இதற்கு காரணமாம்.

    சிம்பு எப்போது வாய் திறப்பார்

    சிம்பு எப்போது வாய் திறப்பார்

    ஆனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு தான் நடித்த படத்தின் சக்சஸ் மீட்டிற்கு சிம்பு வராததற்கு உண்மையான காரணம் என்ன என்பது பற்றி அவர் தான் சொல்ல வேண்டும். அவர் எப்போது வெளிப்படையாக சொல்வார் என அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சிம்பு வெளிப்படையாக கூறும் வரை இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என கூறப்படுகிறது.

    English summary
    Maanaadu film, which was released on November 25, recently celebrated its 25th day of success. The success meet which was held in Chennai, was attended by most of the actors and actresses who starred in the Maanaadu film. But the non-attendance of the hero Simbu was the subject of great controversy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X