என்னது மனநலம் பாதிக்கப்பட்டவராக நடிக்கிறாரா விஜய்...கதையை லீக் செய்த IMDb
சென்னை : விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள்.
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புக்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மீதமுள்ள பகுதிகளை படமாக்க படக்குழு மீண்டும் ஜார்ஜியா செல்ல உள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் பீஸ்ட் படத்தின் ஷுட்டிங்கை முடித்து விட்டு, அதைத் தொடர்ந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

2022 ல் தளபதி 66
பீஸ்ட் படத்தின் ஷுட்டிங்கை முடித்த பிறகு சில மாதங்கள் ஓய்விற்கு பிறகு தளபதி 66 படத்தின் ஷுட்டிங்கை துவக்க விஜய் திட்டமிட்டுள்ளார். தோழா படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி தான் தளபதி 66 படத்தை இயக்கி போகிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. விஜய் முதல் முறையாக இரு மொழிகளில் நடிக்கும் படம் இதுவாகும்.

கதையை லீக் செய்த IMDb
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் தளபதி 66 படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் விஜய் நடிக்கும் ரோல் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச திரைப்படங்கள் பற்றிய விபரங்களை வெளியிடும் IMDb இணையதளத்தில் தான் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மனநோயாளியா விஜய்
அதாவது தோழா படத்தில் கழுத்திற்கு கீழ் எந்த பாகங்களும் செயல்படாத பக்கவாதம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவராக நாகர்ஜுனாவை காட்டி இருப்பார் வம்சி. அதே போல் இந்த படத்திற்கு, மற்றொரு விநோத நோயால் பதிக்கப்பட்டவராக விஜய்யை காட்ட போகிறார்களாம். Erotomania என்ற நோயால் பாதிக்கப்பட்டவரை பற்றியது தான் படத்தின் கதை என கூறப்பட்டுள்ளது.

இது தான் கதையா
Erotomania என்ற மனநல நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை சுற்றியது தான் படத்தின் கதை. இந்த நோயுடன் அவர் எப்படி எல்லாம் போராடுகிறார், அவர் எப்படி அந்த நோயில் இருந்து மீண்டு வருகிறார் என்பது தான் தளபதி 66 படத்தின் கதை என அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022 ல் இந்த படம் துவக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வம்சி விளக்கம் தருவாரா
ஆனால் உண்மையில் இது தான் படத்தின் கதையா என்பதை டைரக்டர் வம்சி தான் விளக்க வேண்டும். டிசம்பர் மாதத்திற்கு பிறகு தளபதி 66 பற்றிய அப்டேட்கள் வரிசையாக வெளியிடப்படும் என ஏற்கனவே டைரக்டர் வம்சி கூறி விட்டதால், கதை பற்றிய தகவலுக்கும் அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











