twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரகசிய திருமணம்... தனிக்குடித்தனம்... மெய்யாலுமா விஷால்?

    By Sudha
    |

    பரபர கிசுகிசுவாக ஓடிக் கொண்டிருக்கிறது, உடன் நடித்த நடிகையுடன் ரகசியத் திருமணம் முடித்து தனிக்குடித்தனம் செய்து கொண்டிருக்கிறார் நடிகர் விஷால் என்ற மேட்டர்.

    தமிழ் இளைஞர்கள் வேண்டுமானால் என்னைக் காதலித்துக் கொள்ளட்டும். ஆனால் மணந்தால் மலையாளிதான் என்று கூறிக்கொண்டிருந்த அந்த களையான நடிகையைத்தான் மனைவியாக்கிக் கொண்டார் என சிலரும், இல்லையில்லை இவர் வேறு என்று சிலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

    எதுக்கு இந்த சஸ்பென்ஸ், இழுவை சமாச்சாரமெல்லாம்... நேரடியாகவே கேட்டுவிட்டால் போகிறது என்று விஷாலையே விசாரித்தோம்.

    Vishal

    'நான் எந்த விஷயத்தையும் பெரும்பாலும் மறைத்ததில்லை. அதுவும் மீடியாவிடம் உண்மையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு ஹிட் கிடைச்சிருக்கு. இன்னும் இப்படி நிறைய சந்தோஷங்களைப் பார்க்கணும் நான். அப்புறம் திருமணம் எனும் பெரிய சந்தோஷத்தை அனுபவிச்சிக்கிறேன். இது வெறும் கிசுகிசுதான்.. எனக்கு அதில் வருத்தமும் இல்லே," என்றார்.

    English summary
    Actor Vishal denied his secret marriage with an actress.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X