»   »  எம்ஜிஆர், விஜய் இருவருக்கும் ஒரே நேரத்தில் குறி வைத்த விஷால்

எம்ஜிஆர், விஜய் இருவருக்கும் ஒரே நேரத்தில் குறி வைத்த விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஷாலின் ஒவ்வொரு மூவ்வுமே பக்காவாக திட்டமிட்ட காய் நகர்த்தல்களாகத்தான் இருக்கின்றன, ஒரு தேர்ந்த அரசியல்வாதியுடையதுபோல‍!

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று அடுத்தடுத்து தேர்தல் வெற்றிகளை சுவைத்த விஷால் அடுத்து அரசியலைக் குறி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதனை உறுதிப்படுத்தும் வகையில்தான் விஷாலின் பேச்சு, நடவடிக்கைகள் இருக்கின்றன. தான் அடுத்து நடிக்கவிருக்கும் படத்துக்கும் நாளை நமதே என்று எம்ஜிஆரின் புகழ்பெற்ற டைட்டிலைக் கைப்பற்றி இருக்கிறார்.

Is Vishal targets Vijay?

விஜய்யைத்தான் போட்டியாக நினைத்து விஷால் செயல்படுவதாகவும் சிலர் சொல்வார்கள். விஜய்யின் ரசிக மன்றங்களை அவரது ரசிக மன்ற நிர்வாகியை இழுத்ததன் மூலம் கைப்பற்றியவர், பின்னர் விஜய்க்கு போட்டியாகவே புலி என்பதற்கு பாயும் புலி என்று டைட்டில் வைத்தார்.

இப்போது விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். அவருக்கு போட்டியாகவே இந்த நாளை நமதே படத்தில் மூன்று ரோல்களில் நடிக்கிறார் என்று கிசுகிசுக்கிறார்கள்.

ரெண்டு பேருக்கும் அப்படி என்ன முன் பஞ்சாயத்தோ...?

English summary
Sources say that Vishal is targeting Vijay in both cinema and politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil