அமரகாவியம் விழாவிற்கு வராவிட்டாலும் அனுஷ்கா என் பிரண்ட் தான்...: ஆர்யா
சென்னை: நடிகை அனுஷ்காவுக்கும், தனக்கும் இடையில் எந்தவித மோதலும் இல்லை என விளக்கமளித்துள்ளார் நடிகர் ஆர்யா.
இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் அனுஷ்கா. இந்நிலையில், சமீபத்தில் ஆர்யாவின் தயாரிப்பில் அவரது தம்பி நாயகனாக நடிக்கும் அமரகாவியம் பட ஆடியோ ரிலீஸ் நடைபெற்றது.
அவ்விழாவிற்கு தன்னுடன் நடித்த அனைத்து நடிகைகளையும் அழைத்திருந்தார் ஆர்யா. தங்களது படவிழாவிற்கேக் கூட வராத திரிஷா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள் இந்த விழாவில் பங்கு கொண்டு திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.
ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனுஷ்கா மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. நயன்தாராவிற்கும், அனுஷ்காவிற்கும் தெலுங்குப் படவுலகில் நிலவும் போட்டி காரணமாகவே அனுஷ்கா விழாவைப் புறக்கணித்தார் எனச் செய்தி பரவியது.
மேலும், ஆர்யா மீது அனுஷ்கா கோபமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக ஆர்யா செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது :-

வரவில்லை...
அமரகாவியம் பட விழாவுக்கு அனுஷ்கா, டாப்சியை அழைத்து இருந்தேன். அவர்கள் வரவில்லை.

பிசியோ பிசி....
அனுஷ்கா பாகுபலி படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். டாப்சி இந்தி படப்பிடிப்பில் இருந்தார்.

சுமூக நட்பு...
எனவேதான் அவர்களால் வர முடியவில்லை. அனுஷ்காவுக்கும் எனக்கும் இடையே எந்த மோதலும் இல்லை. இருவருக்கும் இடையே சுமூகமான நட்பு உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆரம்பம் படம்....
ஆர்யா, டாப்சியுடன் அஜீத்தின் ஆரம்பம் படத்தில் சேர்ந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியாணி விருந்து...
அதேபோல், ரம்ஜான் சமயத்தில் ஆர்யா தன் படவேலைகளில் பிசியாக இருந்ததால் நண்பர்களுக்கு பிரியாணி விருந்தளிக்கவில்லையாம். இதனால் விரைவில் நண்பர்களை அழைத்து பெரிய விருந்து கொடுக்க உள்ளார். அதில் அனுஷ்கா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.


Click it and Unblock the Notifications











