Suriya Son: சூர்யாவையே ஓவர் டேக் செய்த சூர்யா மகன்.. அச்சு அசல் அம்மா ஜாடை.. ஊரு கண்ணு படுதே!
சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தம்பதியர்களில் சூர்யா - ஜோதிகா தம்பதியருக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு. கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு, குடும்பப் பிரச்னை என்று கட்டுக் கதைகளை பலரும் அவிழ்த்துவிட, அதன் பின்னர் இருவரும் தனி தீவுக்கு சுற்றுலா சென்று அசத்தினர். சிறந்த காதல் ஜோடி மட்டும் இல்லாமல், சிறந்த பெற்றோர்கள், சிறந்த குடிமகன்கள், திரைத்துறை மட்டும் இல்லாமல் ஒரு சக மனிதனாக மெச்சத் தகுந்த வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என முன்னுதாரணமாக இருக்கிறார்கள். சூர்யா தற்போது தனது படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டவர் தான்.
அந்த வகையில் இந்தியா முழுவதும் நடைபெறும் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் சென்னை சிங்கம் அணியின் உரிமையாளராகவும் பிராண்ட் அம்பாசிட்டராகவும் இருப்பவர் நடிகர் சூர்யா. இந்த டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆனது கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வருவது மூன்றாவது சீசன்.

ஐ.எஸ்.பி.எல்: இப்படி இருக்கையில் நேற்று அதாவது ஜனவரி 20ஆம் தேதி சென்னை சிங்கம் மற்றும் அகமதாபாத் லயன்ஸ் அணிகளுக்ளுக்கு இடையில் போட்டி நடைபெற்றது. 10 ஓவர் கொண்ட போட்டியாக இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நடந்த இந்த போட்டியில் சென்னை சிங்கம்ஸ் அணியினர் சிறப்பாக விளையாடினாலும், 20 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.
சூர்யா மகன்: இந்த போட்டியை நேரில் பார்க்க சென்னை சிங்கம்ஸ் அணியின் உரிமையாளரும் சென்னை சிங்கம்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிட்டருமான சூர்யா வந்திருந்தார். அப்போது அவர் தனது மகன் தேவ்-ஐ உடன் அழைத்து வந்திருந்தார். சூர்யா மற்றும் ஜோதிகா என இருவரும் தங்களது குழந்தைகளை தங்களது சினிமா பட நிகழ்ச்சிகள், அகரம் அறக்கட்டளையின் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அழைத்து வந்துள்ளனர். ஆனால் முதல் முறையாக தங்களது சினிமா நிகழ்ச்சி மற்றும் அகரம் நிகழ்ச்சி அல்லாத கிரிக்கெட் போட்டியைப் பார்க்க அழைத்து வந்துள்ளார். சூர்யாவுடன் தேவ்-ஐப் பார்த்த பலருமே தேவ் அப்படியே அவரின் அம்மா ஜோதிகா ஜாடையில் இருக்கிறார் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











