பருத்திவீரன் பஞ்சாயத்து.. நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட சூர்யா - அமீர்?.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: கார்த்தியை வைத்து அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் மெகா ஹிட்டானாலும் அவருக்கும் சூர்யா தரப்புக்கும் அந்தப் படத்திலிருந்துதான் மோதல் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் பருத்திவீரன் பஞ்சாயத்து தலை தூக்கியது. இதனால் இந்த விவகாரத்தில் அனல் பறந்தது நினைவுகூரத்தக்கது.
சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. சமீப காலமாகவே சமூக அக்கறையுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் அவர். சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்களுக்கு மெகா ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஆனால் எதற்கும் துணிந்தவன் படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் படத்தின் கதைக்களம் பொள்ளாச்சி அராஜகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. அந்த மாதிரியான கதையில் தைரியமாக நடித்ததற்காகவே சூர்யாவை ரசிகர்கள் பெரிதும் பாராட்டினர்.

கங்குவா: தற்போது அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாகவும் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் படம் வெளியாகிறது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கங்குவா க்ளிம்ப்ஸுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர்.
அடுத்த படம்: கங்குவா படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பாரா இல்லை சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பில் தற்போது பிஸியாக இருக்கிறார். இன்னும் சில மாதங்களில் அவர் பட வேலைகளை முடித்துவிட்டால் சூர்யா அடுத்ததாக வாடிவாசலுக்கு செல்வார். இல்லையென்றால் புறநானூறு படத்தை முடித்துவிட்டு வாடிவாசலுக்கு செல்வார் என்று கருதப்படுகிறது.
கன்ஃபார்ம்தான்: இதற்கிடையே கார்த்தியை வைத்து அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் தொடர்பான பஞ்சாயத்து மீண்டும் சில மாதங்களுக்கு முன்பு தலைதூக்கியது. இந்த விவகாரத்தில் சூர்யா, கார்த்தி, சிவகுமார், ஞானவேல் ராஜா ஆகியோருக்கு எதிராக அமீரின் நண்பர்களான பல இயக்குநர்கள் ஒன்று திரண்டனர். அமீரும் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் இந்த விஷயத்தில் மூச்சு விடவில்லை.
இருந்தாலும் வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்க வேண்டாம். அவருக்கு பதிலாக மோகன் லாலை நடிக்க வைக்கலாம் என சூர்யா வெற்றிமாறனிடம் கூறியதாகவும்; அதற்கு வெற்றியோ ஆர்ட்டிஸ்ட் செலக்ஷனை நான் பார்த்துக்கொள்கிறேன். இதில் அமீர்தான் நடிக்க வேண்டும் என கறாராக சொல்லிவிட்டதாகவும் கூறப்பட்டது. அதனையடுத்து அமீர் நடிக்கும்போது தானும் நடித்தால் சரியாக வராது என்று முடிவெடுத்து சூர்யா விலகிவிட்டதாகவும் ஒரு பேச்சு ஓடியது.
அதெல்லாம் இல்லை: ஆனால் அந்தத் தகவலில் துளியும் உண்மை இல்லை என்று சொல்லப்பட்டது. தற்போது வாடிவாசலில் அமீரும், சூர்யாவும் இணைவது உறுதியாகியிருக்கும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது திரைத்துறையினர் சார்பில் சமீபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் ரஜினி, கமல், சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் அமீரும் வெற்றிமாறனுடன் கலந்துகொண்டார். அப்போது விழாவில் அமீரை பார்த்த சூர்யா எந்த தயக்கமும் இல்லாமல் நேராக அவரிடம் சென்று 'அண்ணே' என்று சொல்லி கட்டியணைத்துக்கொண்டாராம். இதனை பார்த்த அங்கிருந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியமாக போய்விட்டதாம். எனவே வாடிவாசலில் இரண்டு பேரும் நடிப்பது உறுதிதான் என்கின்றனர் திரைத்துறையினர்.


Click it and Unblock the Notifications











