நன்றி மறக்காத தளபதி.. விஜயகாந்த் மகனுக்கு விஜய் செய்யப்போகும் உதவி இதுவா?.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது. அவர் இருந்தவரை எத்தனையோ பேர் அவரால் பயன் அடைந்திருக்கின்றனர். சாமானியர்கள் முதல் பிரபலங்கள்வரை அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். இந்தச் சூழலில் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியனுக்கு விஜய் உதவி செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
விஜயகாந்த் இந்தப் பெயரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. சினிமாவில் நுழைந்து தனக்கான தனித்த உடல் மொழி, ஸ்டைல், வசன உச்சரிப்பு, நடிப்பு என அனைத்திலும் முத்திரை பதித்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென தனி ரசிகர் படை சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் விஜயகாந்த். அவ்வாறு அவர் அப்படி செய்தது சாதாரண விஷயமில்லை என்பது பலரும் ஒத்துக்கொண்ட உண்மை.

கெத்து கேப்டன்: ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். கேப்டன் என்ற பட்டத்துக்கு உரிய முறையில் பல விஷயங்களை தனியாளாக வழி நடத்தியவர் அவர். சிவாஜியின் இறப்பில் கூட்டத்தை ஒற்றை ஆளாக கட்டுப்படுத்தியது, ஏதேனும் பிரச்னை என்றால் எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் முதல் ஆளாக களத்தில் குதிப்பது, நட்சத்திர கலை விழாவை திறம்பட நடத்தி காண்பித்தது என அவர் உண்மையில் கேப்டன் தான் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள்.
நடிக்க மறுத்த கதாநாயகிகள்: விஜயகாந்த் வளர்ந்துவந்த நேரத்தில் அவரது நிறத்தையும், தோற்றத்தையும் வைத்து பல நடிகைகள் அவருடன் நடிக்க மறுத்ததாக சொல்லப்படுவதுண்டு. இருந்தாலும் அதையெல்லாம் கண்டு துவளவில்லை கேப்டன். மாறாக திறமையை வளர்த்து வெற்றியை பெற்றால் ஒதுக்கியவர்களும் வருவார்கள் என்ற கோட்பாட்டின்படி இயங்கி; தன்னை ஒதுக்கியவர்களையே மீண்டும் தன்னுடன் நடிக்கும்படி செய்தார்.
உடல்நலக்குறைவு: சினிமாவில் கலக்கிவந்த விஜயகாந்த் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவருக்கு சில துரோகங்கள் நிகழ்த்தப்பட்டன. அது விஜயகாந்த்துக்கு ரொம்பவே மன உளைச்சலை கொடுத்தது. இதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி முழு ஓய்வு பெற்றார். பிறகு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உடல் முழு அரசியல் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உதவி: இதற்கிடையே இப்போது டாப் ஹீரோவாக இருக்கும் விஜய்யின் வளர்ச்சிக்கு விஜயகாந்த் ரொம்பவே உதவி செய்தார். செந்தூரப்பாண்டி படத்தில் சம்பளமே வாங்காமல் விஜய்க்காக கெஸ்ட் ரோலில் நடித்தார். இப்போது விஜயகாந்த் உயிரிழந்திருப்பதால் அவரது மகனுக்கு சினிமாவில் விஜய் உதவ வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைக்க ஆர்ம்பித்தார்கள்.
விஜய்யின் உதவி: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி விஜயகாந்த்தின் மகனான சண்முக பாண்டியன் படைத்தலைவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் டீசரை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்யும்படி விஜய்யிடம் படக்குழு கேட்டதாகவும்; அதற்கு அவரோ, எப்போது ஆடியோ லான்ச் என்று சொல்லுங்கள் நானே வருகிறேன் என்று சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறாராம் இதனை பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார். முன்னதாக விஜய்யின் GOAT படத்திலும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த்தை தோன்ற வைத்திருக்கிறார்கள் என்று ஒரு பேச்சு ஓடுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











