ஐஸ்வர்யாவ தான் கஷ்டம், ஸ்வீட் ஹார்ட்டை ஈசியா இம்பிரஸ் பண்ணலாம்: தனுஷ்
சென்னை: தனது மனைவி ஐஸ்வர்யாவை இம்பிரஸ் பண்ணுவது கஷ்டம் என்று கூறிய தனுஷ் இந்தி நடிகை சோனம் கபூரை இம்பிரஸ் பண்ணுவது மிகவும் எளிது என்று தெரிவித்துள்ளார்.
தனுஷ் சோனம் கபூருடன் சேர்ந்து ராஞ்ஹனா என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இது தான் தனுஷ் நடித்திருக்கும் முதல் இந்தி படம். இந்நிலையில் தன்னுடன் ஜோடியாக நடித்த சோனம் கபூர் பற்றி தனுஷ் மனம் திறந்துள்ளார்.
சோனம் கபூர் ஏற்கனவே தனுஷ் மாதிரி கணவன் வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

சோனம் ஒரு ஸ்வீட்ஹார்ட்
சோனம் கபூர் ஒரு ஸ்வீட் ஹார்ட். படப்பிடிப்பின் போது நான் அசௌகர்யமாக உணரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் என்று கூறியுள்ளார் நம்மூர் மாப்பிள்ளை தனுஷ்.

சோனம் பொறுமைசாலி
நான் தப்புத் தப்பாக இந்தி பேசியபோதும் சோனம் பொறுமையாக இருந்தார். அவர் நினைத்திருந்தால் என் இந்தியைப் பார்த்து சிரித்திருக்கலாம். அப்படி அவர் செய்திருந்தால் என் தன்னம்பிக்கை போயிருந்திருக்கும் என்று தனுஷ் தெரிவித்தார்.

இம்பிரஸ் பண்ணுவது ஈசி
சோனம் கபூரை ஈசியாக இம்பிரஸ் பண்ணிவிடலாம் என்று தனுஷ் தெரிவித்துள்ளார். தனது மனைவி ஐஸ்வர்யாவை இம்பிரஸ் பண்ணுவது மிகவும் கஷ்டம் என்று அவர் முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











