தாய்லாந்தில் குடும்பத்துடன் ரிலாக்ஸ் செய்யும் சிம்பு: கண்ணுபட போகுதய்யா

By Siva

Recommended Video

Maanadu Movie Update: மாநாடு படம் கைவிடப்படுகிறது! வெளிவந்துள்ள உண்மை- வீடியோ

சென்னை: சிம்பு தனது குடும்பத்தாருடன் சேர்ந்து தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கத் தான் சிம்பு தனது உடல் எடையை வெகுவாக குறைத்தார். லண்டனுக்கு சென்று வெயிட்டை குறைத்துவிட்டு நாடு திரும்பியவர் ஞானவேல்ராஜா தயாரிக்கும் மஃப்டி கன்னட பட ரீமேக்கில் நடிக்க சென்றுவிட்டார்.

It is family time for Simbu in Thailand

ஏற்கனவே மாநாடு படம் டிராப் என்று பேசப்பட்ட நிலையில் சிம்பு வேறு படத்தில் நடிக்கத் துவங்கியதை பார்த்தவர்கள் அவர் வெங்கட் பிரபு படத்தில் நடிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பினார்கள்.

மாநாடு படம் கைவிடப்படவில்லை என்று தெரிவித்த வெங்கட் பிரபுவோ காஜல் அகர்வாலை வைத்து வெப் தொடரை இயக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். மஃப்டி ரீமேக்கில் நடித்துக் கொண்டிருந்த சிம்பு திடீர் என்று கிளம்பிச் சென்றுவிட்டார் என்று செய்திகள் வெளியாகின.

ஞானவேல்ராஜாவுக்கும், சிம்புவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிம்பு தன் அப்பா டி.ஆர்., அம்மா உஷா, தம்பி குறளரசன், அவரின் மனைவி நபீலா அகமது, தங்கை இலக்கியா, அவரின் கணவர் அபிலாஷ், குழந்தையுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா கிளம்பிவிட்டார்.

சிம்பு தாய்லாந்தில் குடும்பத்தாருடன் சேர்ந்து சிரித்தபடி போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. மொத்த குடும்பத்தையும் பார்க்கவே அழகாக உள்ளது. சுத்திப் போடுங்க சிம்பு என்று எஸ்.டி.ஆர். ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலரோ தலைவா அப்போ மஃப்டி ரீமேக் என்னாச்சு என்று கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னதாக சிம்பு தனது முன்னாள் காதலியான ஹன்சிகாவின் மஹா படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்தார். அந்த படத்தில் அவர் விமானியாக நடித்துள்ளார்.

சிம்பு படப்பிடிப்புக்கு உரிய நேரத்தில் வந்து முழு ஒத்துழைப்பு கொடுத்ததை பார்த்து மஹா இயக்குநர் ஜமீலும், ஹன்சிகாவும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். ஹன்சிகா பரிந்துரை செய்து தான் சிம்புவை நடிக்க வைத்தார் ஜமீல் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X