நான் இல்ல 'இ அம்மாயி' தான்: கீர்த்தி சுரேஷ் மீது பழிபோடும் ஹீரோ நானி
ஹைதராபாத்: நேனு லோக்கல் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனதற்கு தான் அல்ல கீர்த்தி சுரேஷே காரணம் என நடிகர் நானி தெரிவித்துள்ளார்.
தில் ராஜு தயாரிப்பில் நானி, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள படம் நேனு லோக்கல். படம் வரும் 3ம் தேதி வெளியாக உள்ளது. முன்கூட்டியே வெளியாக வேண்டிய படம் தற்போது வெளியாகிறது.
படம் தள்ளிப் போனதற்கு நானி தான் காரணம் என்று கூறப்பட்டது.

நானி
நானிக்கும், தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அவர்களின் தகராறால் தான் பட வேலைகள் இழுத்துக் கொண்டே போனது என்று கூறப்பட்டது.

நான் இல்லை
பட ரிலீஸ் தள்ளிப் போனதற்கு நான் அல்ல கீர்த்தி சுரேஷ் தான் காரணம். கீர்த்தி பிற படங்களிலும் பிசியாக இருப்பதால் டேட்ஸ் கொடுக்க முடியாமல் போனதே ரிலீஸ் தள்ளிப் போனதற்கு ஒரே காரணம் என்று கூறியுள்ளார் நானி.

கீர்த்தி சுரேஷ்
சமத்துப் பிள்ளையாக நேனு லோக்கல் படத்தில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதன் பிறகே அவர் நானி படப்பிடிப்புக்கு சரியாக வராமலும், வந்தாலும் கேரவனில் உட்கார்ந்துவிடுவதாகவும் டோலிவுட்டில் பேசப்பட்டது.

பொறாமை
கீர்த்தியின் கிடுகுடு வளர்ச்சி பிடிக்காமல் பொறாமையில் சிலர் வதந்தியை பரப்பிவிடுவதாக அவர் தரப்பில் இருந்து கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











