தமிழ்நாட்டு பக்கமே வராத சூர்யா.. சிக்ஸ் பேக் சர்ச்சை தான் காரணமா?.. வாடிவாசல் வருமா வராதா?
சென்னை: ரெட்ரோ படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், நடிகர் சூர்யா அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். ஏற்கனவே இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குவார் என கூறப்பட்டது. அதனை நேற்று நடந்த ரெட்ரோ புரோமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா உறுதிப்படுத்தியுளளார். அதே நேரத்தில் தயாரிப்பாளர் பெயரையும் அறிவித்து விட்டார். இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசலில் எப்போது நடிப்பார் என்ற கேள்விதான் ரசிகர்களை வாட்டி வருகிறது.
சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் மே 1ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ளது. ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் ஹைதராபாத்தில் ரெட்ரோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பதற்கு முன்பு புதிய படத்தில் நடிக்க இருப்பதை உறுதி செய்தார். வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி படத்தில் நடிக்க இருப்பதாகவும், சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் வம்சியுடன் இணைந்து ஒரு படத்தில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மே மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சூர்யா கூறினார். இது ஒரு அழகான பயணமாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
சிக்ஸ் பேக் சர்ச்சை: ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சூர்யாவின் தந்தை சிவக்குமார் தமிழ் சினிமாவில் முதல் முறையாக சிக்ஸ் பேக் வைத்தது என் பிள்ளைதான் என மார்தட்டி பெருமையுடன் பேசியிருந்தது சர்ச்சையானது. முதலில் பொல்லாதவன் படத்திற்காக நடிகர் தனுஷ் சிக்ஸ் பேக் வைத்தார் என்றும் அதன் பிறகு விஷால் என்றும் செய்திகள் வெளியானது. இதற்கு சிவக்குமாரை சினிமா விமர்சகர்களும் கடுமையாக வறுத்தெடுத்தனர். இருபபினும் இந்த சர்ச்சை இன்னும் காட்டு தீ போல் கொழுந்து விட்டு எரிந்துகொண்டுதான் இருக்கிறது.
தமிழ் பக்கமே வராத சூர்யா?: ரெட்ரோ படம் ரிலீஸ் ஆக சில நாட்களே உள்ள நிலையில், நடிகர் சூர்யா இப்படத்திற்கான புரோமோஷனுக்காக தமிழ்நாட்டு பக்கமே வரவில்லை என கூற்பபடுகிறது. ஒன்று கடவுள் தேசம் பக்கமும், அக்கட தேசத்திலும் மட்டும் தான் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டு பக்கம் அவரது கண்கள் திரும்பவில்லையாம். காரணம் கங்குவா படத்தின் தோல்வியும் அதன் பிற்கு அடுத்தடுத்து சந்தித்து வரும் பிரச்னைகள் தான் காரணம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழ் படத்தில் நடித்துக்கொண்டு தெலுங்கில் பேட்டி அளிப்பதும் அடுத்த படம் குறித்த அப்டேட்டை தெரிவிப்பது நியாயமா என அவரது ரசிகர்களே சமூகவலைதளங்களில் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.

தீராத பிரச்னை: கங்குவா படத்திற்கு கடுமையான விமர்சனத்தை ரெட்ரோ படத்தின் மூலம் தவிடுபாெடியாக்குவார் என்ற நம்பிக்கையோடு அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இருப்பினும் நடிகர் சூர்யா சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறார். இதற்காகவே அவர் தமிழ் மீடியாக்களிடம் பேட்டி அளிக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. சிக்ஸ் பேக், கங்குவா தோல்வி, அவரது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் போன்ற கேள்விகளும் எழக்கூடும். இதிலிருந்து தப்பிக்க இந்த வழியை பின்பற்றுவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. ரெட்ரோ படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் நடத்தாமல் இருப்பது வருத்தம் தான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வாடிவாசல் எப்போது?: வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் நடிக்க இருப்பது தொடர்பான அறிவிப்பு வெளியானதும் சூர்யா ரசிகர்கள் குஷியானார்கள். திரை பிரபலங்களும் வியந்து பார்த்தார்கள், பாலாவிற்கு பிறகு வெற்றிமாறன் சூர்யாவிற்கு கிடைத்திருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால், இப்படததின் அறிவிப்பு மட்டுமே ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது. படப்பிடிப்பு இன்னும் தொடங்கியபாடில்லை. தற்போது இயக்குநர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்திற்கான ஸ்கிரிப்டை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. களவாணி படத்தில் சரண்யா கூறுவது போல் ஆனி போயி ஆடி வந்தா டாப்புல வருவான் என்பது போன்று சூர்யாவும் அடுததடுத்து படங்களில் பிஸியாக இருக்கிறார். இதற்கு முடிவே இல்லாத தொடர்கதையாக மாறி வருகிறது.
ஜூலையில் படப்பிடிப்பு?: அண்மையில் வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, வாடிவாசல் திரைப்படம் ஸ்கிரிப்டை வெற்றிமாறன் அருமையாக செதுக்கி கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும். இந்த படம் வந்தால் நிச்சயம் மக்கள் கொண்டாடுவார்கள். நான் பேச்சுக்காக சொல்லவில்லை. சூர்யா கரியரில் மிகச்சிறந்த அத்தியாயம் என்றும் பாராட்டி பேசியிருந்தார். மேலும் வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது என்ற கேள்விக்கு ஜூன் முடிந்தால் ஜூலை தாெடங்கிடுவோம் என கூறினார். ஆனால், ஜூலையில் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். வெங்கி அட்லூரி படத்திற்காக கால்ஷீட் ஒதுக்கியிருக்கும் சூர்யா எப்போது வருவார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

மீண்டும் மீண்டுமா: தமிழ் திரையுலகில் ஒரு படம் குறித்த அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு தொடங்காமலேயே அதன் தேதி அதிகமுறை மாற்றம் செய்யப்பட்டது வாடிவாசல் தான். அதிக முறை தேதி மாற்றம் செய்யப்பட்டதில் புதிய சாதனை விருதே கொடுக்கப்படலாம் என நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டார்கள். ஆனால், வெற்றிமாறன் நாட்களை கடத்தி கொண்டிருப்பதால் சூர்யாவிற்கு தயக்கம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முதலில் ஸ்கிரிப்டில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதில் சூர்யாவுக்கு ஆர்வம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அவர் கண்ணில் வாடிவாசல் என்ற வாசகத்தை தவிற ஸ்கிரிப்டை கண்ணில் காட்டவில்லையாம். வெற்றிமாறன் எப்போது முடிப்பார் என்ற எதிர்பார்ப்போடு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு காத்துக்கொண்டிருக்கிறாராம்.
அக்டோபரில் ஆரம்பம்: முன்பு போன்று சொதப்பாமல் இந்த முறை தேதியில் மாற்றம் இல்லாமல் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டான தேதியை வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தேதியை அறிவித்திருக்கின்றனர். அக்டோபர் மாதத்தில் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்குவது உறுதியாகிவிட்டதாம். இதில் எந்த மாற்றமும் இல்லை என தயாரிப்பு நிறுவனம் சூர்யாவிடம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறதாம். அந்த நம்பிக்கையில் தான் சூர்யா வாடிவாசலுக்கு முன்பு வெங்கி அட்லூரி படத்தில் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











