தக் லைஃப் பற்றிய தகவல்.. சிம்பு ரசிகர்களுக்கு உச்சக்கட்ட கொண்டாட்டமா?.. அட செம மேட்டரா இருக்கே

சென்னை: விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் தக் லைஃப் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

கமல் ஹாசன் கடைசியாக விக்ரம் படத்தில் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவை தற்போது கமலின் லைன் அப்பாக இருக்கிறது. இடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டது. அதற்கு பதிலாக சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

It is reported that the promo of Simbu s character in Thug Life Movie

கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனும் மணிரத்னமும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஷூட்டிங் அப்டேட்: இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி செர்பியாவில் விறுவிறுப்பாக நடந்தது. இதனையடுத்து மக்களவைத் தேர்தல் நடந்ததால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது.

விலகிய நடிகர்கள் மீண்டும் இணைந்தார்கள்: இதற்கிடையே படத்தில் கமிட்டாகியிருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக சில வாரங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. அதேசமயம் சிம்பு இந்தப் படத்தில் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்பட்டது. நிலைமை இப்படி இருக்க துல்கர் சல்மான் மீண்டும் இணைந்திருப்பதாகவும், ஜெயம் ரவிக்கு பதிலாக அசோக் செல்வன் இணைந்திருப்பதாகவும் இப்போது சொல்லப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடந்துவருகிறது.

சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி: இந்நிலையில் தக் லைஃப் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தப் படத்தில் சிம்பு கமலுக்கு வில்லனாக நடிக்கிறார் என்று பேச்சுக்கள் எழுந்தன. அதேசமயம் வில்லனாக இல்லை வேறு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. சூழல் இப்படி இருக்க இன்று சிம்பு கேரக்டர் பற்றிய ப்ரோமோ ஒன்று தக் லைஃப் படக்குழு சார்பில் வெளியிடப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கோலிவுட்டில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X