தமிழ் ராக்கர்ஸ் விஷயத்தில் காலாவதியான விஷாலின் சவால்: என்ன செய்யப் போகிறார்?
Recommended Video

சென்னை: விஷால் சவால் விட்டதில் இருந்து தமிழ் ராக்கர்ஸ் ரூட்டை மாற்றி செயல்படுகிறது.
புதுப்படங்களை இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டும் வரும் தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை பிடித்து சிறையில் தள்ளுகிறேன் பார் என்று வீர வசனம் பேசினார் விஷால்.
படத்தில் எத்தனையோ வில்லன்களை பிடித்த விஷாலுக்கு தமிழ் ராக்கர்ஸ்லாம் ஜுஜுபி என்று கருதப்பட்டது.

விஷால்
விஷால் விட்ட சவால் காலாவதியாகி பல காலம் ஆகிவிட்டது. அவரால் தமிழ் ராக்கர்ஸை ஒன்றுமே செய்ய முடியவில்லை. இனியும் அவரை நம்பி புண்ணியம் இல்லை என்று பெரிய இயக்குனர்கள் கூட தமிழ் ராக்கர்ஸிடம் கோரிக்கை விடுக்கும் அவல நிலை ஏற்பட்டது. யார் கோரிக்கை விடுத்தாலும் தமிழ் ராக்கர்ஸ் கேட்பதாக இல்லை.

பட ரிலீஸ்
விஷால் சவால் விடும் முன்பு சத்தமில்லாமல் படத்தை வெளியிட்டு வந்தது தமிழ் ராக்கர்ஸ். அவர் சவால் விட்ட பிறகோ, படம் ரிலீஸாகும் அதே தேதியில் இந்த நேரத்தில் வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டு செய்கிறது. தேதி, நேரம் ஆகியவற்றை சொல்லிவிட்டு அதன்படி படத்தை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸை விஷாலால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

செயல்
பேச்சை குறைத்துவிட்டு விஷால் செயலில் இறங்குவது நல்லது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. பெரிய ஆள், பெரிய பதவிகளில் இருக்கிறார் என்பதால் தமிழ் ராக்கர்ஸ் விஷயத்தில் அவரின் செயல்பாடுகள் சரியில்லை என்று அவர் முகத்திற்கு நேராக கூற முடியாமல் பலர் உள்ளனர். இதை புரிந்து கொண்டு விஷால் செயல்பட வேண்டும்.

சினிமா
மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு போவதாக விஷால் கூறியுள்ளது பாராட்டுக்குரியது. ஆனால் சினிமாவில் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறதே. முதலில் அதை செய்விட்டு பின்னர் அரசியலுக்கு சென்று அங்கு சுத்தம் செய்யலாமே. உங்களால் முடியும் விஷால்.


Click it and Unblock the Notifications